பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

361


364. பெருங் காஞ்சி

பாடினிக்குப் பொன்மலை தந்தும் பாணனுக்குப் பொற்றாமரை தந்தும் சிறப்புச் செய்க ஆட்டு இறைச்சியை நெருப்பிலிட்டுக் கொளுத்திச் சூட்டோடு வாயிலிட்டு நாக்கில் புரட்டுக. கள்ளுண்ட செவ்வாயில் இவ் இறைச்சியை அதுக்குக.

உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும் மறப்போர் வீரனே மகிழ்வோம் வருக.

நாளைக்குச் சுடுகாட்டில் மரப் பொந்தில் கூகை இருந்து

கூவும்; தாழிகளையுடைய சுடுகாட்டுக்குப் போகும் நாளில் இவற்றை நாம் துய்க்க இயலாது. அதனால் இருக்கிறவரையும் மகிழ்வுடன் வாழ்வோமாக.

வாடா மாலை பாடினி அணியப், பாணன் சென்னிக் கேணி பூவா எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க. மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்திக், காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப, உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும், மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே! அரியஆகலும் உரிய, பெரும!நிலம் பக வீழ்ந்த அலங்கற் பல் வேர் முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே. திணையும் துறையும் அவை. -

அவனைக் கூகைக் கோழியார் பாடியது.

365. பெருங் காஞ்சி

விசும்பு முகமாகவும், திங்களும் ஞாயிறும் இரு கண்களாகவும் உடையவள் நிலமகள்.

அவள் பார்த்திருக்கும் போதே சீரும் சிறப்பும் மிக்க உலகை ஆண்ட பெருவேந்தர்கள் எல்லாம் இறந்து ஒழிகின்றனர்.