பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



தொன்று படு துளையொடு பரு இழை போகி, நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, ‘விருத்தினன் அளியன், இவன் எனப், பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி, நன்றும் அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, இரவினானே, ஈத்தோன் எந்தை அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின், உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன், நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, ஞாங்கர் நெடுமொழி பயிற்றித், தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே.

திணை - அது துறை - இயன்மொழி,

ஓய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

377. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

கிள்ளி இனிது உறங்கும் மனையை என் தடாரிப் பறையோடு சென்று அணுகினேன்.

அங்கு அவனை'அவி உணவு உண்ணும் அமரர்கள் காக்க! அறநெஞ்சினன் வாழ்க!” என்று புலவர்கள் பாராட்டினர். மற்றும் “இவனுக்கு ஏனைய அரசர்கள் ஒப்பு ஆகார் என்று செப்பி நின்றனர். அதைக் கேட்டு வியந்து நின்ற என்னைக் கண்டு நாடுகள் பல திரியும் நயம் மிக்க கிணைஞனே! நீயும் என்னால் போற்றத் தக்கவன் என்று கூறி அழைப்பித்து மலை தரு மணியும், காடுகள் தரும் பொன்னும், அலைகள் தரும் முத்தும், பல்வேறுபட்ட உடை வகைகளும் கள்ளும் தந்து என்னைச் சிறப்பித்தான். இது கனவோ என்று வியக்கும்படி வழங்கி உதவினான்.

புகழ்மிக்க நாடு என்று சிறப்பித்துக் கூறினால் அது அவன் வள நாடு தான் ஆகும். அரசன் என்றால் அவன்தான் பேரரசன் ஆவான்.