பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

375



பீடு இன்று பெருகிய திருவின்,

பாடுஇல், மன்னரைப் பாடன்மார், எமரே!

திணை - பாடாண் திணை, துறை - வாழ்த்தியல்.

அவனை அவர் பாடியது.

376. ஒய்மான் நல்லியாதன்

அந்தி மாலை அது சற்றுத் தள்ளி இருள் படரும் நேரம். கையில் தடாரிப் பறை, பாணர்கள் உணவு உண்ணும் நேரம். அவன் முற்றத்தில் சற்றுத் தொலைவில் ஒதுங்கி நின்றிருந்தேன்.

கிழிந்த ஆடை, நைந்த கோலம்: மெலிந்த தோற்றம் இதனைக் கண்டனன்; நிலவு சற்று அதன் ஒளிபட்டு என்னை அவனுக்குக் காட்டித் தர இமைப்பொழுதில் ஞெரேர் என என்னை விளித்தான். விருந்தினன் வருந்தினன் என்று என்னை அறிந்தான். அருந்திலன் என்பதை அறிந்தவனாகி என் கைத்தாளம் அதனைத் தன் கையில் வாங்கிக் கொண்டு கடுப்பு மிக்க கள்ளைத் தந்தான். ஆட்டு இறைச்சி அதற்குத் துணை ஆகியது. நரகம் போன்று இருந்த என் வறுமையைப் போக்கினான்; வாரித் தந்தான். அன்று இரவே மிக்க செல்வம் தந்து என்னை வளப்படுத்தினான். வறுமை என்னை விட்டு நீங்கியது. செழுமை என்னை அணுகியது.

வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. வள்ளல்கள் வேறு பிறர் உளர் என்றாலும் அவர்களை அன்று முதல் நினைத்தது கிடையாது. என் கிணைப் பறை சிறுகுரல் எழுப்பியது இல்லை. அதனைத் தட்டியது இல்லை.

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி சிறு நனி இறந்த பின்றைச் செறி பிணிச் சிதாஅர் வள்பின் என் தெடாரி தழிஇப், பாணர் ஆரும்அளவை, யான் தன் யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக், குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்றப், பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத்