பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


375 ஆய் அண்டிரன்

பாழ்பட்டு நின்ற மன்றத்தில் ஒரு பக்கம் யாம் துயிலும் இடமாகக் கொண்டு வாழ்கிறோம். எங்கள் கிணைகளை பனம் நார் குருத்து இவற்றோடு சேர்த்துக் கிணைப் பறையைச் சுருக்கிட்டுக் கட்டி உழவர் மனைகளில் சென்று பசி போக்கி வருகிறோம். வறுமை தீர வழங்கும் வள்ளல்கள் யார் உளர் என்று தேடி யாரும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கடலை நாடி முகக்கச் செல்லும் முகிலைப் போல ஒப்பற்ற உன்னை உள்ளி உன்பால் வந்துள்ளேன்.

நீ புலவர்களுக்கு அரணாக இருந்து அவர்களை ஆதரிப் பாயாக அவர்களுக்கு நீதான் அரண்; காப்பு ஆகின்றாய்.

பெருமைபடப் பேசினாலும் அவற்றை மடுத்துக் கேட்க யார் உளர்? செல்வம் படைத்தவர் ஆயினும் அவர்கள் செவி மடுத்துக் கேளார். அவர் மன்னர்களாயினும் அவர்களை எம் போன்ற புலவர்கள் பாட மாட்டார்கள்.

அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் நாரும் போழும் கிணையொடு சுருக்கி, ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ. ‘ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?” எனப் பிரசம் தூங்கும் அறாஅ யாணர், வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந: பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! யாவரும் இன்மையின் கிணைப்ப, தவாது பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் புலவர். புக்கில் ஆகி, நிலவரை நிலீஇயர் அத்தை, நீயே ஒன்றே நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, நிலவன்மாரோ, புரவலர் துன்னிப், பெரிய ஒதினும் சிறிய உணராப்