பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

373



374. ஆய் அண்டிரன்

ஆண் மானின் நெற்றிபோலச் சிதறிக் கிடக்கும் எம் தலை மயிர் படியுமாறு பனி பெய்யும் விடியற்காலையில் மன்றத்தில் இருக்கும் பலா மரத்து அடியில் இருந்து கொண்டு தடாரிப் பறை கொண்டு குறிஞ்சி மலையை யாம் பாடப் பெரிய கலைமான் கூட்டம் செவி சாய்த்துக் கேட்கிறது. அக்குறிஞ்சி நிலத்து வாழும் குறவர், குறவர் சிறுவர்களும், அவர்தம் தாயர்களும் மான் கறியையும், சந்தனக் கட்டையை யும், யானைத் தந்தத்தையும், புலியின் தோலில் பரப்பி எமக்குத் தந்து சிறப்புச் செய்தனர். அத்தகைய வளம்மிக்க மலை நாட்டை உடையவன் ஆய் அண்டிரன்.

ஞாயிறே நீ விசும்பில் திரிகிறாய்; உன்பால் இவனைப் போல் கொடைத் தன்மை உள்ளதா? நீ இவனுக்கு நிகராக மாட்டாய்.

கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன, பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், மன்றப் பலவின் மால் அரைப் பொருந்தி, என் தெண் கண் மாக் கினை தெளிர்ப்ப ஒற்றி, இருங் கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக், கருங் கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப், புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் மான் கண் மகளிர், கான் தேர் அகன் துறைச் சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, வண்மையும் உடையையோ? - ஞாயிறு:கொன் விளங்குதியால் விசும்பினானே!

திணை - பாடாண் திணை, துறை - பூவை நிலை.

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் பாடியது.