பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


378. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி

தென் நாட்டில் பரதவர் சாயவும், வடக்கே வடுகர் வீழவும் வெற்றிகள் கண்ட வேந்தன், அவன் அழகிய அரண்மனை சென்று தடாரிப் பறை கொண்டு வஞ்சித் துறையில் அவன் வெற்றிச் சிறப்புகளை எடுத்துப் பாடினேன்.

அது கேட்டு என்னால் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க முடியாத உயர்வகை அணிகலன்களை வாரித் தந்தான். அவன் நாடு பல வென்று அங்குத் தேடித் திரட்டிய நன் கலன்கள் அவை.

வறுமையில் உழன்ற என் பெருஞ் சுற்றத்தினர் அவற்றை எடுத்து அணிந்து கொள்ளத் தெரியாமல் அவதிப்பட்டனர். அது புதுமையாக இருந்தது. நகைப்பும் தந்தது.

விரலில் செறிப்பதைச் செவிக்கு மாட்டினர். செவியில் இடுபவை விரலில் செறித்தனர்.

அரைக்கு அணியவை கழுத்துக்கு மாட்டினர். கழுத்துக்கு அணிபவை அரைக்கு அணிந்தனர்.

இராமனுடன் சென்ற சீதையை வலிதின் பற்றி வான்வழி இராவணன் கொண்டு சென்ற நாள் அவள் தன் அணிகலன்களை நிலத்தில் இட்டாள். அவற்றைக் கண்டு எடுத்த குரங்கின் கூட்டம் அவற்றைத் தலைகீழாக மாற்றி அணிந்து கொண்டன. அதைத்தான் இந்தச் சுற்றத்தினர் நினைவுபடுத்தினர்.

எம் சுற்றம் அற்றம் நீங்கி அருஞ்செல்வம் படைத்து உயர்வு பெற்றனர். அந்தக் காட்சி நகைப்பு ஊட்டுவதாக உள்ளது. நினைக்கும்தோறும் மகிழ்வு தருகிறது.

தென் பரதவர் மிடல் சாய,

வட வடுகர் வாள் ஒட்டிய,

தொடை அமை கண்ணித் திருந்து வேல் தடக் கைக்,

கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,

நல் தார், கள்ளின், சோழன் கோயில்,

புதுப் பிறை அன்ன சுதை செய் மாடத்துப்,

பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்