பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

379



அரிக் கூடு மாக் கினை இரிய ஒற்றி, எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே, அது கண்டு, இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், விரற் செறி மரபின செவித் தொடக்குநரும், செவித் தொடர் மரபின விரற் செறிக்குநரும், அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமேஇருங் கிளைத் தலைமை எய்தி, அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

திணை - அது துறை - இயன்மொழி. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது

379. ஒய்மான் வில்லியாதன்

நெல் அரியும் உழவர் தம் கூர்வாள் மழுங்கி விட அதனை யாமைப் புறத்தில் கல் எனத் தீட்டுவர். அத்தகைய வளம் மிக்க நாடு இலங்கை; அதன் தலைவன் வில்லியாதனைப் பாடும் கிணைவர் யாம். பன்றி இறைச்சியை நெய்யில் வறுத்து நாள் காலையில் சோற்றொடு தந்து பசி தீர்ப்பவன்; அவன் நிழலில் வாழ்பவன் யான்; ‘யான் அவன் புகழைப் பாடி வருகிறேன்’ என்று உன் கிணைவன் வந்து என்னிடம் கூறினான்.

கேட்டது கொண்டு வேட்கை மீதுாரக் குன்றுகள் பல கடந்து உன்னைக் கண்டு பரிசில் கொண்டு செல்ல வந்துள்ளேன். தாய் முலைப்பால் பருகத் தணியா வேட்கையோடு வரும் குழவிபோல் உன் நீள்மதில் உடைய ஊரை வந்து அணுகியுள்ளேன்; யானே