பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அவன் தாள் நிழல் வாழ்க்கை பெறுவேன் ஆக அவனே பெறுக

என் நா இசைக்கும் நல் வாழ்த்துக்கள்!

யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; அவனே பெறுக, என் நா இசை நுவறல்; நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், பின்னை மறத்தோடு அரியக் கல் செத்து, அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியாதன் கிணையேம்; பெரும! ‘குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, வல்லன், எந்தை, பசி தீர்த்தல் எனக், கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூறக், கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது. விண் தோய் தலைய குன்றம் பின்பட, -------- ர வந்தனென், யானேதாய் இல் துவாக் குழவி போல, ஆங்கு அத் திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே,

திணை - அது துறை - பரிசில் துறை.

ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

380. நாஞ்சில் வள்ளுவன்

நாஞ்சில் வள்ளுவன் தென்னவனுக்குப் படைத் தலைவன் ஆவான்.

மழை நீர் கடலில் வீழ்ந்தால் அது முத்து ஆகும். அம் முத்துக்கள் அவன் நாட்டில் மிக்குக் கிடைக்கும். மணம் மிக்க மலை மல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்கும்; தீஞ்சுளைப் பலாக்கள் மிக்கு விளங்கும். அத்தகைய நாஞ்சில் நாட்டுத் தலைவன் அவன் ஆவான்.

தன்னை எதிர்த்து வர நினைக்கும் பகைவர்க்குச் சேண் விளங்குபவன். அவர்கள் அணுக இயலாத வலிமை உடையவன்.