பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

381



தன்னை நாடி வரும் நண்பர்க்கு ஒடி உதவும் உயர் நண்பன்.

அவர்களுக்கு உள்ளங்கைபோல் உதவும் இயல்பினன்.

கந்தனை அனைய புகழ்மிக்கவன். சிறுவர்போல் சிந்தை யுற்றவன். கள்ளம் அறியாதவன். .

இவ்வுலகம் வறுமையுற்ற காலத்திலும் அவனை அணுகும் என் சுற்றத்தினர் செழுமை பெற்றனர். அவர்கள் இன்மையைத் தீர்த்தான்.

தென் பவ்வத்து முத்துப் பூண்டு, வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,

  • } * * * * * * * * ங் கடல் தானை, இன் இசைய விறல் வென்றித், தென்னவர் வய மறவன்; மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து, நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய, வேறுபெ........ த்துந்து, - தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன், நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன், வல் வேற் கந்தன் நல் இசை அல்ல, * . . . . . . . - த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்; அன்னன் ஆகன்மாறே, இந் நிலம் இலம்படு காலை ஆயினும், புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.

திணை - அது; துறை - இயன்மொழி. நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.

381. கரும்பனூர் கிழான்

ஊனும் உணவும் அவை திகட்டி விட்டால் இனிது எனப் பாலில் பெய்தவற்றையும், பாகில் கொண்ட இனிய பண்டங்களை யும் தந்து பருகச் செய்வான். விருந்து தந்து அருந்தச் செய்தவன்.

அந்நாளில் ஒருநாள் ‘எம் நாட்டில் விழவு எடுக்கிறார்கள். அதனை விழைந்து காணச் செல்கிறோம்’ என்று கூற அவனுக்கு அது அதிர்ச்சி தந்தது.