பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


எம்பால் அன்பு மிக்க உடையவன்; பிரிவுக்கு வருந்தினான்; ஒன்று சொன்னான்; பாழ் நிலத்தில் வறிதே பெய்யும் மழைபோல

யாருக்கும் பயன்படாத வாழ்க்கையுடையவர் பலர். அவரிடத்துச் சென்று பாடிப் பரிசில் பெற நினைக்காதே; உன் கை வருந்த உன் பறையைக் கொட்டாதே; அவர்கள் உன் இன்மை தீர்க்க நன்மை யாதும் செய்யார்.

‘வறன் உற்ற காலத்தில் நீ எங்கிருந்தாலும் என்னை நினைத்துக் கொள். இங்கு வந்து சேர்ந்து விடு; மறக்காமல் வந்து சேர்க’ என்று சொல்லி அனுப்பினான்.

வேங்கட நாட்டவன் அவன் அறத்துறை அம்பி போன்றவன். படகுத் துறையிலுள்ள படகு எளியவர் செல்வம் மிக்கவர் என்று பேதம் பார்க்காமல் யாரையும் கரை சேர்க்கும். அதுபோல் உதவுபவன்; நிலைத்த கொள்கை உடையவன். கரும்பன் ஊரன் என்பானின் காதல் மகன் ஆவான்.

ஊனும் ஊணும் முனையின், இனிது எனப், பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், அளவுபு கலந்து, மெல்லிது பருகி, விருந்துறுத்து, ஆற்ற இருந்தனெமாகச், சென்மோ, பெரும எம் விழவுடை நாட்டு? என, யாம் தன் அறியுநமாகத் தான் பெரிது அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சித், துணரியது கொளாஅவாகிப், பழம் ஊழ்த்துப், பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்ப், பெயல் பெய்தன்ன செல்வத்து ஆங்கண், ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச், சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி, விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின், இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம், அதனால், இரு நிலம் கூலம் பாறக், கோடை வரு மழை முழக்கு இசைக்கு ஒடிய பின்றை, சேயைஆயினும், இவணைஆயினும், இதற்கொண்டு அறிநை வாழியோ, கிணைவ!