பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

383



சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே-எந்தை, ஒலி வெள் அருவி வேங்கட நாடன், உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று, இருங் கோள் ஈராப் பூட்கைக், கரும்பனுரான் காதல் மகனே.

திணையும் துறையும் அவை. கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.

382, சோழன் நலங்கிள்ளி

கடலில் படை சென்று பகைவர் மிடல் சாய்த்துக் கொணரும் பொருள் உடையவன்; சோழ நாட்டுத் தலைவன் நலங்கிள்ளியின் புகழ் பாடும் பொருநர் யாம் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவர்கள் ‘பிறரைப் பாடிப் பரிசில் பெற யாம் செல்வது இல்லை. அவனையே யாம் பாடுவோம். அவன்தாள் வாழ்க” என்று வாழ்த்துரை நல்கி, “நீயும் அவன்பால் செல்க, சென்றால் உமக்கு நெய்யில் பொரித்த ஊன் கலந்த சோறு தருவான்’ என்று சொல்லி அனுப்பினர்.

அதனால் யானும், உன்பால் பரிசு பெற்றுச் சென்ற பழைமையோரோடும் சேர்ந்து உன்னை அணுகியுள்ளோம். அரவு தன் தோலைக் களைந்து புது வடிவு பெறுவதுபோல யாம் எம் வறுமை நீங்கப் புதுவாழ்வு வாழ்வோம். பரிசில் நல்கி எமக்கு வரிசை செய்க.

இவ்வுலகம் அதன் ஆட்சி உனதே ஆகும். எம் கிணைப் பறை கொண்டு நீ வென்ற தேர்களின் புகழைச் செப்பி ஏர்படப் பாடுவோம்; கிணை ஒலி கேட்டு நின் பகைவர் இனைந்து நடுங்குவர். உன் புகழ் கேட்டு அவர் மாழ்குவர்.

கடற்படை அடல் கொண்டி,

மண்டுற்ற மலிர் நோன் தாள்,

தண் சோழ நாட்டுப் பொருநன்,

அலங்கு உளை அணி இவளி