பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நலங்கிள்ளி நசைப் பொருநரேம், பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம், அவற் பாடுதும், அவன் தாள் வாழிய! என; நெய் குய்ய ஊன் நவின்ற பல் சோற்றான், இன் சுவையநல்குரவின் பசித் துன்பு அற என்பநின் பொருநர் பெரும அதற்கொண்டு முன்னாள் விட்ட மூது அறி சிறாஅரும், யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்திக், கண் கேள்விக், கவை நாவின், நிறன் உற்ற, அராஅப் போலும் வறன் ஒரீஇ- வழங்கு வாய்ப்ப, விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! நினதே. முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய, எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் எறிதொறும் நுடங்கியாங்கு நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், வென்ற தேர், பிறர் வேத்தவையானே.

திணை - அது துறை கடைநிலை, சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

383. பரிசில் கடா நிலை

கோழி கூவி எழுப்பும் விடியற்காலை பனி பெய்த நாள் என் தடாரிப் பறை கொண்டு அவன் எருதுகளை வாழ்த்திப் பாட அவன் நெடுங் கடை வாயிலில் நின்றேன்.

அவன் தன் மனைக்கண் என்னை அழைப்பித்து உண்ணத் தெளிவான கள்ளைத் தந்தான். என் பழைய கந்தல் ஆடை கிழியுண்டு இருந்ததால் அதனை மாற்றிப் புத்தாடை தந்தான். பாம்பின் உரித்த தோலையும், மூங்கிலின் உள் சோற்றைப் போலவும் நுண்மையான இழைகளையும் உடைய பூ வேலைப்பாடு மிக்க ஆடையைத் தந்தான்.