பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


நீ எதிர்க்கும் அரசன் அரண்வலி உடையவன்; அகழியில் முதலைகள் மிக்கு உள்ளன. காவல் செய்வோர் கைவிளக்கு நிழலை இம்முதலைகள் கவ்வச் செல்லும். மதில்கள் செம்பு போல் உறுதி யானவை. யானைப் படையும் அவன்பால் உள்ளது. படை வலிமை உடைய அவன் உயிருக்கு அஞ்சி ஒதுங்கி மறைந்து இருக்கிறான். அவன் செயல் நன்மை தருவது ஆகாது.

அதனால் இத்தகைய கீழ் மகனோடு நீ போர் செய்வது தக்கது ஆகும். வலிமை படைத்தவன் நீ; அவன் மீது போர் தொடுப்பாயாக!

நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, வேக வெந் திறல், நாகம் புக்கென, விசும்பு தீப் பிறப்பத் திருகிப் பசுங் கொடிப் பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்குப் புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், சினம் கெழு தானைச் செம்பியன் மருக! கராஅம் கலித்த குண்டு கண் அகழி, இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் கடு முரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச், செம்பு உறழ் புரிசைச் செம்மல் மூதூர், வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், ‘நல்ல என்னாது, சிதைத்தல் வல்லையால், நெடுந்தகை செருவத்தானே.

திணை - வாகை துறை - அரசவாகை, முதல் வஞ்சியும் ஆம்

அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

38. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய

கிள்ளிவளவன்

களிறுகள் மிக்கு உடைய சேனைகளைக் கொண்டு வெற்றிகளைக் குவிக்கும் படைவேந்தே நீ சினந்து நோக்கும் இடங்களில் எரி தவழ்கிறது. நீ நயந்து பார்க்கும் இடத்துப் பொன் பூக்கிறது; செல்வம் வாரி வழங்குகிறாய்.