பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

87



56. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்

எருதுக் கொடியை ஏந்தியவனும் சூலப் படையை உடையவனும் ஆக விளங்குபவன் சிவபெருமான், கடலில் தோன்றும் சங்கு போன்ற நிறத்தவன் பலராமன்; நீலமணி போன்ற மேனியையும், கருடக் கொடியையும் கொண்டவன் திருமால்; மயிலை வாகனமாகக் கொண்டவன் முருகன்; இந் நால்வரும் இவ் உலகைக் காக்கும் கடவுளர் ஆவர்.

இந் நால்வருள் கூற்றுவனைப் போல் விளங்கும் சிவனை உன் சீற்றத்தால் ஒத்து விளங்குகிறாய். பலராமனை வலியால் நிகர்த்து உள்ளாய் எதிரிகளைக் கொல்லும் திருமாலைப் புகழால் ஒத்து விளங்குகிறாய். கருதியது முடிப்பதில் முருகனை ஒத்து விளங்குகிறாய்.

ஒவ்வொரு வகையில் ஒரு தெய்வத்தை நிகர்த்து விளங்குகிறாய். உன்னால் இயலாதது யாதும் இல்லை.

இரவலர்க்கு வரையாது ஈக யவனர் தந்த மதுவினை மகளிர் பொன்கலத்து ஏந்தித்தரப் பருகி மகிழ்ந்து வாழ்க இருள் அகற்றும் ஞாயிறு போலவும் திங்கள் போலவும் நீ நின்று நிலைத்து வாழ்க.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்: கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்: மண்ணுறு திரு மணி புரையும் மேனி, விண் உயர் புட் கொடி, விறல் வெய்யோனும், மணி மயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல்இசை, நால்வருள்ளும் கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்: வலி ஒத்தீயே, வாலியோனை, புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை: முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின் ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின் யாங்கும்