பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

89



நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க என்னது உம் கடிமரம் தடிதல் ஒம்பு- நின் நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே.

திணை - வஞ்சி; துறை - துணை வஞ்சி.

அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

58. சோழன் குராபள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்

நீயோ காவிரி பாயும் சோழநாடன்; இவனோ ஆல விழுதுபோல் நிழல் தந்து தம்மைச் சார்ந்தோருக்கு உதவுபவன்.

இடி சிறிது எனினும் அது அரவுகளை நடுங்கச் செய்யும். அதுபோலப் பகைவர்களை நடுங்கச் செய்யும் வீரம் படைத்தவன் இவன்; பாண்டியர் குடியுள் ஏறு போன்றவன்.

நீயோ அறம் மிக்கு உள்ள உறந்தைக்குத் தலைவன்; இவனோ பொதிய மலையில் கிடைக்கும் சந்தனத்தையும் கடலில் கிடைக்கும். முத்தினையும் சிறப்பாகப் பெற்று அவற்றால் வளம் மிக்கவன்; முரசு முழங்கும் சேனையை உடையவன்; தமிழ் தலைமை பெற்றுள்ள கூடல் மாநகர் வேந்தனும் ஆவான்.

பால் நிற வண்ணன் ஆகிய பலராமனும், நீல நிறத்தவன் ஆகிய திருமாலும் உடன்நிற்பதுபோல் நீவிர் இருவரும் இணைந்து செயல்பட்டால் கடல் சூழ்ந்த இவ் உலகம் உம் கையகப்படும்.

அதனால் நெடுநாள் பழகியவர் போலவும் உம்மிடம் மிக்க நட்புடையவர் போலவும் காட்டிக் கொண்டு இடையே புகுந்து உம்மைப் பிரிக்க முயல்வர்; அவர்கள் மேற்போக்கான சொற்களைக் கேட்டு நடந்து கொள்ளாதீர்.

இன்றுபோல உம் நட்பு என்றும் நிலவுவதாக அடுகளத்தில் வெற்றிகள் மேலும் மேலும் பெருகுவதாக! உம் புலிச் சின்னமும் மீன் சின்னமும் சேரநாட்டு மன்னன் குன்றின்மேல் பதிவனவாக!