பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

89


பாடியவர்: வெண்ணிக் குயத்தியார். வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம். பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெரு வளத்தான். திணை: வாகை. துறை: அரச வாகை.

(புறப்புண் நாணி வடக்கிருந்தோன் நின்னிலும் நல்லன் என்றனர். இதனாற் கரிகாலனது வென்றியே கூறினர். ஆதலின் அரசவாகை ஆயிற்று. வளி தொழில் ஆண்ட செய்தியை அறிக. இது புயல் முதலாயவற்றாற் கலங்கட்கு ஊறு நேராவாறு காத்தற்குத் தக்க எந்திர அமைப்பு ஆகலாம்.)

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே 5

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

மிகப் புகழ் உலகம் எய்திப்,

புறப்புண் நாணி, வட்க்கிருந்தோனே!

வளவனே! கடலிற் செல்லும் மரக்கலம், காற்று உரிய திசையிலே வீசாததனால் ஓடாதுபோகக், காற்று இயங்குமாறு போலக் கலத்தைச் செலுத்துதற்குரிய பொறிமுறைகளைக் கையாண்டு கலம் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர் நின் முன்னோர். மதயானை மிகுந்த படை வன்மை உடையோனே! பகைவரினும் மேற்சென்று, அவர் எதிர் நின்று, அவரைக் கொன்று அழித்த வெற்றி வீரனே! வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே நடந்த போரில் புறப் புண்பட்டனன் சேரன். உலகத்திலே புகழ் பெறுமாறு அவன் வடக்கிலிருந்து உயிர்நீத்தனன். புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறந்த அவன், புறத்தே அம்பேவிப் போர் முறை பிறழ்ந்த நின்னைக் காட்டினும், நல்லவன் அல்லனோ!

67. அன்னச் சேவலே!

பாடியவர்: பிசிராந்தையார். பாடப்பட்டோன்: கோப் பெருஞ்சோழன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(ஆசிரியர் பெயரை இரும்பிசிராந்தை என்பர் தெய்வச் சிலையார் (தொல். எச்ச. சூ.25). அரசனது இயல்பு கூறுதலான், இயன்மொழி ஆயிற்று. பெருங்கோக்கிள்ளி என்பதும், கோப்பெருஞ் சோழனின் பெயர் போலும், பெருமகோக் கிள்ளி கேட்க என வருவது காண்க) -