பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

புறநானூறு - மூலமும் உரையும்



நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை சிறுவெள் ளாம்பல் ஞாங்கர் ஊதும் கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல், இன்னகை விறலியொடு மென்மெல இயலிச் 15 செல்வை ஆயின், செல்வை ஆகுவை, விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர், தலைப்பாடு அன்று, அவன் ஈகை, நினைக்க வேண்டா, வாழ்க, அவன்தாளே!

சிறிய யாழை உடைய பாணனே! 'கயத்து ஆமையை அம்பிலே கோத்தாற் போன்ற உடுக்கையின் இசையைக் கேட்டு இளைப்பாறிச் செல்க' என, என்னைப் பலவும் கேட்கிறாய் முதியோனே! தைப்பனியால் குளிர்ந்த குளத்தின் தெளிவான நிறைநீர் போலக், கொள்ளக் கொள்ளக் குறையாத சோறுடையது அவனது நகர்.அடுநெருப்பு அல்லது சுடுநெருப்பு அறியாதது அது. அவ் வளமிகுந்த நாட்டு வேந்தன் கிள்ளிவளவன். அவன் புகழை உள்ளத்திலே கொண்டவனாக, இன்நகை தவழும் விறலியோடும், மெல்ல மெல்ல நடந்து அவன்பாற் செல்வாயாக. சென்றால், நீ பெருஞ்செல்வம் பெறலாம். விறகு வெட்டக் காட்டுக்குச் சென்றவனுக்குப் பொன் கிடைத்ததுபோல எதிர்பாராது கிடைப்பதல்ல அவன் ஈகை உறுதியாக நீ நம்பியே செல்லலாம். அவன் தாள் வாழ்க! (இவ்வாறு பாணனைக் கிள்ளியிடம் செல்ல' வழிப்படுத்துகிறார் புலவர்)

சொற்பொருள்: 2. காழ்-நாராசம், இரும்பினாற் செய்த அம்பு. 3. தகைத்த - பிணிக்கப்பட்ட கிணை - உடுக்கை யோசை. 4. தணிக ஆறிப் போவாயாக 8. சுடுதீ - பகைவர் ஊரைச் சுடும் நெருப்பு. 9. இரு மருந்து-சோறும் தண்ணிரும்.17.விறகு ஒய் மாக்கள்-விறகைக் காட்டினின்றும் ஊரகத்து வெட்டிக் கொணரும் மாக்கள். பொன் - விழுப்பொருள். 18. தலைப்பாடு - நேர்ப்பாடு; வாய்ப்பு.

71. இவளையும் பிரிவேன்!

பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி.

('பகைவரைப் புறங்காண்பேன்; பிழைப்பின் இதுவாகியர்' என வஞ்சினம் உரைத்தனன்; அதனால் வஞ்சினக் காஞ்சி ஆயிற்று. ‘மாவன், ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதனழிசி, இயக்கன் இவர் உளப்படப் பிறருடனும் கலந்து பழகுதலை இழந்தேனாகுக' என்பதனால், இவரது தகுதியும் மேம்பாடும் அறியப்படும்)