பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

107


என் தலைவன், இவ்வூரனல்லன். அவனுக்கு உரிய நாடும் இஃதன்று. அதனால், அவன் வெற்றிபெற்றும் அதுபற்றிப் பேசுவோர் இருவகையார் ஆயினர். அவன் வெற்றி என்பார் சிலர்; இல்லை என்பார் சிலர். என் காதுகளுக்கு இருவர் சொற்களும் நன்றாகவே இருந்தன. என் வீட்டின் முன்னே வந்து பனைமரத்தில் சாய்ந்து நின்றேன்; முடிவில் அவன் வெற்றியாதலையே யானும் கண்டேன்! -

சொற்பொருள்: 1. என் ஐ என்னுடைய தலைவன். 4. ஆடு - வென்றி.7 அரை-பக்கத்தையுடைய போந்தை பனைமரம். 'நல்ல' என்றது, இகழ்ச்சிக் குறிப்பு.

86. கல்லளைபோல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு; காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன்: . திணை: வாகை. துறை : ஏறாண் முல்லை.

(நிகரற்ற தமிழ்க்குடி மரபின் தன்மையை உயர்த்துக் கூறுவாராக, 'ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே' என்றலின் ஏறாண் முல்லை ஆயிற்று. காவற்பெண்டு - செவிலித்தாய். நற்றாய்க்கும் தனக்கும் பாசத்தால் வேறுபாடற்ற நிலையில் இவ்வாறு கூறுகின்றாள்)

சிற்றில் நற்றுண் பற்றி, நின்மகன் யாண்டுளனோ? என வினவுதி; என்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஒரும் புலிசேர்ந்து போகிய கல்அளை போல. ஈன்ற வயிறோ இதுவே: 5 தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! என் சிறுவிட்டின் தூணைப்பற்றி நின்று, நின் மகன் எவ்விடத்தான்? என்று கேட்கிறாய்! என் மகன் எங்கு உள்ளானோ யான் அறியேன். புலி கிடந்து பின் வெளியே போன மலைக்குகை போல, அவனைப் பெற்ற வயிற்றினை இதோ பார். அவன் போர்க்களத்திலே வந்து தோன்றுவான். அவனை அங்கே போய்க் காண்பாயாக! -

சொற்பொருள்: ஒரும், மாதோ, அசைகள். 5. 'ஈன்றோ வயிறோ இது - என்ற கருத்து, புலிசேர்ந்து போகிய அளைபோல அவனுக்கு என்னிடத்து உறவும் அத்தன்மைத்தே என்பதற்காம்.

87. எம்முளும் உளன்! -

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமானஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்.