பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

115


நீரினை உண்னுமோவென அஞ்சி, அவன் செல்லும் ஊரினர், தம் ஊரையே வெறுத்துக் கைவிட்டுச் செல்வது.

சொற்பொருள்: 2 என்னை - அதியமான் நெடுமான் அஞ்சி. 5. மகளிர்ப் பிணித்தன்று - மகளிரை நெஞ்சு பிணித்ததனால் அவர் துணிகூர்தலினால் உளதாயது. 9. அவன் செல்லும் ஊர் - அவன் எடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஊர். 7. மொசித்த - தின்ற.. 8. கைம்மான் என்பது, எதுகை நோக்கித் திரிந்தது; ஒகாரம், அசைநிலை. - - 97. மூதூர்க்கு உரிமை!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை இயன்மொழி.

(போர்மற மாண்பாகிய அரசனது இயல்பைக் கூறி வாழ்த்துதலால் இயன்மொழி ஆயிற்று)

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊனுற மூழ்கி, உருவிழந்தனவே; வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர் - நறுங் கள்ளின் நாடு நைத்தலின், - 5 சுரை தழீஇய இருங் காழொடு மடை கலங்கி நிலைதிரிந்தனவே; களிறே, எழுஉத் தாங்கிய கதவம் மலைத்து அவா குழுஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடிகழிந்தனவே; 10 மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர் பொலம் பைந்தார் கெடப் பரிதலின், களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே; அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப் பொலந் தும்பைக் கழல் பாண்டில் - 15

கணை பொருத துளைத்தோ லன்னே; ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள், பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு இறுக்கல் வேண்டும் திறையே, மறுப்பின், 20

ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச் சொல்லவும், தேlர் ஆயின், மெல்லியல்,