பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

புறநானூறு - மூலமும் உரையும்


116 Hp5mgÐIpl - epoogpin e-comu|th

கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக், குறுந்தொடி மகளிர் தோள்விடல் இறும்பூது அன்று: அஃது அறிந்துஆ டுமினே. 25

வாள்களோ, பகைவரை வெட்டி வீழ்த்திக் கதுவாய் ஒடிய வடிவு இழந்தன. வேல்களோ, பகைவர் நாடழித்த ஆற்றலால் காம்பின் ஆணி கலங்க நிலைகெட்டன. களிறுகளோ, பகைவர் அரணை மோதி அழித்தலால் கிம்புரிகள் கழன்றனவாயின. குதிரைகளோ, போர்க்களத்துப் பகைவர் உருவழிய மிதித்தும் ஒடியும் சென்றதால் குருதிக்கறை படிந்த குளம்புகளை உடையவாயின. அவனோ, கடல்போன்ற படையுடன் போரிட்டு, அம்புபட்டுத் துளைத்த மார்பகம் உடையவனாயினான். அவன் சினந்தால் எதிர்நிற்பார் யார்? நுங்களுர் நுங்கட்கே வேண்டுமெனிற், போய்த் திறை செலுத்திப் பணிவீராக. யாம் சொல்லியும் அவ்வாறு செய்யீராயின், நும் மனைவியர் நூம்மை இழத்தல் உறுதியாம். இதனை நன்கு ஆய்ந்து, அதன் பின்னரே அவனுடன் போர் செய்ய முயல்வீராக!

சொற்பொருள்: 3. உருவு இழந்தன - கதுவாய்போய் வடிவு இழந்தன; கதுவாய் போதல் - வடுமிகல். 5. கள்ளின் - மதுவை யுண்ட 6. சுரை தழிஇய மூட்டுவாயொடு பொருந்திய, 7. காழொடு - காம்புடனே. 8. மடை - ஆணி. 9. குறும்பு - அரண். 10. தொடி - கிம்புரி, யானையின் கோட்டிற் செறிக்கப்படும் பூண். 12. தார் - மார்பு ஆகு பெயர். பரிதலின் - ஓடுதலால் 13. அசைஇய: - வருந்திய மறுக்குளம்பின - குருதியான் மாறுபட்ட குளம்புடைய வாயின. 14. நிலம் திரைக்கும் நிலவகலத்தைத் தன்னுள்ளே அடக்கும். 15. பாண்டில் - கிண்ணி வடிவான். 16. தோலன் - பரிசையை உடையவன்.பிணிக்கதிர் நெல்லின்-ஒன்றோடொன்று தெற்றிக் கிடக்கின்ற கதிரினை யுடையதாகிய நெல்லினையுடைய. 20. இறுக்கல் - கொடுத்தல். 23. கழல் கனிவகுத்த கழற் கனியால் கூறுபடுத்துச் சுருட்டப்பட்ட ஒதி - பனிச்சை, 25 ஆடுமின்-போர் செய்ம்மின்.

98. வளநாடு கெடுவதோ!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை: கொற்றவள்ளையுமாம்.

(அரசனின் இயல்பின் மிகுதியைக் கூறினமையின் அரச வாகையும், பகைவர் நாட்டின் அழிவைக் கூறினமையின், கொற்றவள்ளையும் ஆயிற்று) .