பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

119


சொற்பொருள்: ஆழிசூட்டிய சக்கரத்தை நடாத்திய) 6. புனிற்றுப் புலால் - நாடோறும் புதிய ஈரம் புலராத புலாலை யுடைய. 7. பூவார்கா - வ்ானோர், இவன் முன்னோர்க்கு வரம் கொடுத்தற்கு வந்திருந்ததொரு கா. 7 எழுபொறி ஏழிலாஞ்சனை. எழா அத் தாயம் - ஒரு நாளும் நீங்காத அரச உரிமை கொல், ஐயம், மன்: அசைநிலைகள். .

100. சினமும் சேயும்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை : அரச வாகை. குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.

(இதுவும் தலைவனது இயல்பைக் கூறினமையின் அரச வாகை ஆயிற்று. 'செறுவர் நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே' என்று, அதியனின் பகைவரை அடுகின்ற இயல்பைக் கூறுவது காண்க)

கையது வேலே காலன புனைகழல்; மெய்யது வியரே, மிடற்றது பசும்புண், வட்கர் போகிய வளரிளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு, வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச் 5

சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரி வயம் பொருத வயக்களிறு போல, இன்னும் மாறாது சினனே, அன்னோ! உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றி யோரே, செறுவர் நோக்கிய கண், தன் . 10

சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே!

கையிலே வேல்; காலிலே வீரக்கழல்; உடலில் வேர்ப்பு: கழுத்திலே பசும்புண்.இவற்றுடன், பனம்பூமாலையும் வெட்சி மலரும் வேங்கைப்பூவும் குடியவனே! புலியுடன் சண்டையிட்ட யானை, சண்டைதீர்ந்துஞ்சினம் அடங்காததுபோல,வந்து, சிவந்த கண்ணுடனேயே நிற்கின்றாயே! ஐயோ! நின்னைச் சினப்பித் தவர்கள் எவரும் பிழைத்திராரே! இப் புதல்வனைப் பார்க்கும் போதுகூட நின் கண்ணின் சினம் நின்னிடத்தே நின்றும்

மாறவில்லையே! .

சொற்பொருள்: பசும்புண் - ஈரம் புலராத பசியபுண்.3 வட்கர் - பகைவர்; வட்கார் என்பது வட்கர் எனக் குறுகி நின்றது.போந்தை - பனம்பூ.6 சுரி சுருண்ட இரும்பித்தை கரிய மயிர் 7 வரி வயம்வரிகளையுடைய புலி, 9. உடற்றியோர் - பகைத்தோர்.