பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

புறநானூறு - மூலமும் உரையும்



101. பலநாளும் தலைநாளும்!

பாடியவர்: ஒளவையார். பாடப்ப்ட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை : பரிசில்கடா நிலை.

("பரிசில் தாழ்ப்பினும் தருதல் தப்பாது’ என்று உரைத்து, அதனைத் தருமாறு குறிப்பாக வேண்டுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று)

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்; பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ, அணிபூண் யானை இயல்தேர் அஞ்சி அதியமான்; பரிசில் பெறுஉங் காலம் 5

நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் தது அது; பொய்யா காதே!

அருந்தே மாந்த நெஞ்சம்! வருந்த வேண்டா, வாழ்க, அவன் தாளே! 20

1. அடுத்துப் புறத்திரட்டு 2. அன்னபேணலன் - 53 3. இழையணி யானை இயல்தேர் அஞ்சி 4. களிறுதான்

33

33

ஒருநாள் இருநாள் அல்ல; பல நாட்கள் மீளமீளச் சென்றாலும், முதல் நாளினைப் போலவே விருப்பமுடன் உதவும் பண்பினன்; யானையும் தேரும் உடையவன்! யானைக் கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம், அதனை விட்டு ஒரு நாளும் தவறாததுபோல, அவன் தரும் பரிசில் நம் கையிலேயே உள்ளது; அது தப்பாதது நெஞ்சே! நீ வருந்தாதே வாழ்க, அவன் தாள்கள்! -

சொற்பொருள்: 3. தலைநாள் போன்ற - முதலிற் சென்ற நாளிற் போன்ற, 8. கையகத்தது - நமது கையகத்தது. 9. அருந்த ஏமாந்த உண்ண ஆசைப்பட்ட நெஞ்சம்: விளி. 10. வருந்த வேண்டா - நீ பரிசிற்கு வருந்த வேண்டா. அருந்த என்பது, அருந்தெனக் கடை குறைக்கப்பட்டது; அருந்தென முன்னிலை ஏவலாக்கி யுரைப்பினும் அமையும். 'அதியமான் விருப்பினன்' என முன்னே கூட்டுக.