பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

123


(மறவர்களை நோக்கிக் கூறியதுபோலத் தலைவனது வென்றி கூறியதனால், அரசவாகை ஆயிற்று.)

போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை; ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சின்னி களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ நுண்பல் கருமம் நினையாது, 5

"இளையன் என்று இகழின் பெறல் அரிது. ஆடே

ஊர்ச்சிறுவர் நீர் ஆடினும் கலங்கும் கரண்டையளவே நீருடையதான சிற்றோடையாயினும், அதனுள் வரும் யானையையும் முதலை கொன்று வீழ்த்திவிடும். அதுபோல, எம் இறைவனின் உண்மை வலுவையும், நுண்ணிய ஆற்றலையும் அறியாது, 'இளையன்’ என்று இகழ்ச்சியாக எவரேனும் கூறியவராக அவன் நாட்டினுள் வந்து நுழைந்தால். அவர் எத்துணை வலியவராயினும், அவனை வெல்லல் அரிது என உணர்வாராக! - *

சொற்பொருள்: 2. குறுமாக்கள் - இளம் புதல்வர்கள். 3. தாள்படு சின்னிர் - காலளவான மிகக் குறைந்த நீர். 4. ஈர்ப்பு உடை - இழுத்தலை யுடைய கராஅத் தன்ன - முதலையை ஒக்கும். என்ஐ - எம் இறைவனது. 6. இகழின் - மதியாதிருப்பின் ஆடு - வென்றி. - 105. தேனாறும் கானாறும்!

பாடியவர்: கபிலர் பாடப்பட்டோன். வேள் பாரி. திணை: பாடாண். துறை : விறலியாற்றுப்படை

('சேயிழை! பாரி வேள்பாற் பாடினை செலினே,. பெறுகுவை' என ஆற்றுப்படுதலின், விறலியாற்றுப்படை

சேயிழை பெறுகுவை, வாள்துதல் விறலி! தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும், பெய்யா தாயினும், அருவி கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக, 5

மால்புஉடை நெடுவரைக் கோடுதோறு இழிதரும் நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பால் பாடினை செலினே.