பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

143


மங்கல அணியை அணிந்த மகளிருடனே. 6. சாயின்று என்ப சாய்ந்தது என்று சொல்லுப. 9. ஒரீஇய நீங்கிய நகர் - கோயில்.

128. முழவு அடித்த மந்தி! பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முட்மோசியார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: வாழ்த்து இயன்மொழியும் ஆம்

(கொடைச்சிறப்பும் வென்றியுமாகிய அரசனது இயல்பு கூறுதலால், இயன்மொழி ஆயிற்று. 'அச் சிறப்போடு நெடிது வாழ்க’ என்பது குறிப்புப் பொருள் ஆதலின், வாழ்த்தும் ஆயிற்று)

மன்றப் பலவின் மாச்சினை மந்தி இரவலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் தெண்கண் கனி செத்து, அடிப்பின், அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில், 5

ஆடு மகள் குறுகின் அல்லது, பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

ஊர்ப் பொதுவிடத்திலே இருந்த பலாமரத்தின் பெரிய கிளையிலே, இரவலர் கட்டியிருந்தவோர் முழவினைப், பலாக் கனிபோலும் என மயங்கி மந்தி தட்ட, அம்மரத்தின்கண் வாழும் அன்னச்சேவல் சிறகடித்துப் பறந்து ஒலியெழுப்பும் வளமுடையது முகில்படியும் ஆயின் பொதியில் மலை. ஆடிச் செல்லும் மகள் ஆங்குச் செல்ல இயலுமேயன்றி, வலியுடைய மாற்றரசர் அதனை நெருங்கவும் இயலாத பெருமையையும் வலிமையையும் உடையது .lتاليو/9ے

சொற்பொருள்: 1. மன்றப் பலவின் மாச்சினை மந்தி - ஊர்ப் பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி, 2.நாற்றிய தூக்கி வைக்கப்பட்ட விசிகூடு-பிணிப்புப் பொருந்திய, 2. பாடு - ஒசை, தெண்கண் - தெளிந்த கண்னை, கனி செத்து - பலாப்பழம் என்று கருதி. அடிப்பின் தட்டின விடத்து. 4. மாறுஎழுந்து அவ்வோசைக்கு மாறு எழுந்து. ஆலும் ஒலிக்கும். 129. வேங்கை முன்றில்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல். - . . .