பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

புறநானூறு - மூலமும் உரையும்


நின்புகழ் கொடுவர, 19. தொடுத்தனம் - சில சொல்லத் தொடுத்தனம் 21. ததையத் தாக்கி - சிதற வெட்டி

127. உரைசால் புகழ்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப் பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: கடைஇநிலை. .

(முரைசு கெழு செல்வர் நகர் போலாதே, ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில்; அது தான் மெய்யோ பொய்யோ என வினவுவதுபோலத் தோற்றுதலின் கடைஇநிலை ஆயிற்று. 'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்’ என்னும் துறைக்கு இளம்பூரணரும். நச்சினார்க் கினியரும் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். சூ. 29:35)

'களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக், களிறில வாகிய புல்லரை நெடுவெளிற், கான மஞ்ஞை கணனொடு சேப்ப, ஈகை அரிய இழையணி மகளிரொடு 5

சாயின்று என்ப, ஆஅய் கோயில், சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே. 10 ,

ஆய் வேளே! இனிய அடிசிலைப் பிறர்க்கு உதவாதார் சிலர்; தாமே உண்டு வயிற்றை நிறைப்பவர் அவர். புகழற்ற முரசு விளங்கும் அருளற்ற அரசர்கள் அவர்கள். ஆயின் நீயோ, நின் யானைகள் அனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டாய். கொடுக்கவியலா மங்கல அணிமட்டுமே நின் மனைவி அணிந் துள்ளாள். பிறவெல்லாம் பரிசிலர் பெற்றுச் சென்றுவிட்டனர். வள்ளன்மை சிறந்த ஆயே! நின்கோயில் மற்றையோர் நகரினும் மேம்படுவதாக! -

சொற்பொருள்: 1. கருங்கோட்டுச் சீறியாழ் - கரிய கோட்டையுடைத் தாகிய சிறிய யாழைக் கொண்டு. 2. பனுவல் - பாட்டு. எய்த்தென - பரிசில் பெற்றுக் கொண்டு போனார்களாக, 3. புல்லரை புல்லிய பக்கத்தையுடைய 3. நெடுவெளில் - நெடிய தறியின்கண்ணே. 4. சேப்ப - தங்க. 5. ஈகை அரிய இழைஅணி மகளிரொடு - பிறிதோர் அணிகலமும் இன்றிக் கொடுத்தற்கரிய