பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

155


("எங்கோ பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்றன்று, பிறர் வறுமை நோக்கிற்று' எனக் கூறிப்பாணனை ஆற்றுப்படுத்துகின்றனர். உடா,அ, போராவாகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ’ எனப், பேகனது கொடை மடத்தைக் கூறினதும் காண்க) .

"பாணன் சூடிய பசும்பொன் தாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக், கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ, ஊரீர் பொலச் சுரத்திடை இருந்தனிர்! யாரீ ரோ? என வினவல் ஆனாக், 5

காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! வென்வேல் அண்ணல் காணா ஊங்கே, நின்னினும் புல்லியேம் மன்னே : இனியே, இன்னேம் ஆயினேம் மன்னே என்றும் உடாஅ போரா ஆகுதல் அறிந்தும், 10

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன், “எத்துணை ஆயினும் ஈதல் நன்று' என. மறுமை நோக்கின்றோ அன்றே, பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே 15

"பாணராகிய நீவர் பொற்றாமரைப்பூச் சூடியவராகவும், நும் விறலியர் பொன்னரிமாலை சூடியவராகவும், தேரினைப் பூட்டு அவிழ்த்துவிட்டு வேற்றுாரார்போலச் சுரத்திடையே களைப்பாறி யிருக்கும் நீவிர் யாவீரோ?” எனக் கேட்கின்றாய்.நிறைந்த சுற்றமும் கொடிய பசியும் உடைய இரவலனே! வெற்றி வேலோனாகிய பேகனைக் காணும் முன், நின்னினும் வறியோம் யாம்! எந் நாளும் போர்த்துத் திரியாவென அறிந்தும், மயிலுக்குப் போர்வையளித்த அருளாளன் அவன். மதயானையும், செருக்கு மிகுந்த குதிரையும் உடையவன். பின்வரும் நன்மையை எதிர்பார்த்தன்று அவன் அளவின்றிக் கொடுப்பது. பிறரது வறுமையை மட்டும் நோக்கி, அதற்கேற்ப அளவிறந்து கொடுப்பதே அவன் வள்ளன்மை. நீயும் அவனைச் சென்று காண விரைவாயாக!

சொற்பொருள்: பசும்பொன் தாமரை - ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ பூட்டுவிட்டு அசைஇ பிணிப்புவிட்டு இளைப்பாறி. 4. ஊரீர்போல - ஊரின்கண் இருந்தீர் போல. 5. யாரீரோ என நீவிர் யாவிர் பாணரோ என 6 காரென் ஒக்கல் - புல்லென்ற சுற்றத்தினர். 7. வென்வேல் - வெற்றிவேல். காணா ஊங்கு காண்பதன் முன், 8. புல்லியேம் - வறியேம், 9. இன்னேம் -