பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

201


நாடானால் என்ன, காடானால் என்ன? மேடானால் என்ன, பள்ளமானால் என்ன? எவ்விடத்தே ஆடவர் நல்லவராக விளங்குகின்றனரோ, அவ்விடத்திலே, நிலனே, நீயும் நன்றாக விளங்குவாய். நிலத்தைப் பொறுத்ததன்று வாழ்வும் தாழ்வும்: அவ்வந் நிலத்துவாழ் ஆடவரைப் பொறுத்ததே என்பது இது. (ஆள்வோர் சிலர் தம் குறையை நாட்டின் மீதேற்றிக் குறைகூற, நாட்டிலுள்ள ஆண்களின் குறைபாடே அது என உரைக்கிறார் புலவர்)

188. மக்களை இல்லோர்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி. திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி. (மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறும் சிறந்த செய்யுள் இது)

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், - 5 மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.

பலவற்றையும் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும் 'உடைமை' எனப்படும் பெருஞ்செல்வம் பெற்றவராயினும் என்ன? மெல்லமெல்லக் குறுகுறு நடந்து சென்று தம் சிறிய கையை நீட்டி, உண்கலத்து நெய்யுடைச் சோற்றிலே இட்டும், அக்கையாலேயே பெற்றோரைக் கட்டிக்கொண்டும், வாயாற் கவ்வியும், கையால் துழாவியும், தம் மேலெல்லாம் சிதறியும், அக் குறும்புகளால் உணவு வீணாகிறதே என்ற நினைவை மயக்கிப், பெற்றோரை இன்பத்தால் மகிழச் செய்யும் மக்களை இல்லாதவர்க்குத், தம் வாழ் நாளெல்லாம் பயனற்ற நாட்களே.

189. உண்பதும் உடுப்பதும்!

பாடியவர்:மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. (செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது).

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, 5