பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

புறநானூறு - மூலமும் உரையும்



விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர் - தாளுளம் தபுத்த வாள்மிகு தானை 5

வெள்வி வேலிக் கோடைப் பொருந: சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன்சிலை, வேட்டுவ நோயிலை யாகுக! ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக் 10

கடல்வயிற் குழிஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற் களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.

மூவேந்தரே எனினும், எம்மைப் பேணி மதியாது கொடுப்பின், அதனை யாம் வேண்டுவேம் அல்லேம் அஞ்சி வந்து அடைந்த பகைவர்க்கோர் புகலிடமாயும், எதிர்த்து வந்தவரைக் கொன்று அழிக்கும் வாள்வலி யுடையவனாயும் விளங்கும், முல்லைவேலிக் கோடைமலைத் தலைவனே! சிறிய பெரிய புழைகளிலிருந்து மான் கூட்டத்தைக் கலைக்கும் சினநாய்களும், வலிய வில்லும் கொண்ட வேட்டுவனே! கடலைச் சார்ந்த முகிலினங்கள் நீர் முகந்தன்றிமீளா அதுபோலப் பரிசிலர் சுற்றம், கோடுயர்ந்த களிறுகளை வழங்கிப் போற்றினாலன்றித், திரும்பிச் செல்லாது என அறிவாயாக! -

சொற்பொருள்: 3. விறல்சினம் தணிந்த வென்றியால் உளதாகிய சினம் தீர்ந்த 4 உறுவர் செல் சார்பு ஆகி - அஞ்சிவந்து அடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய். 5. செறுவர் தாள் உளம் தபுத்த அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த. 6. வெள்வி வேலிக் கோடைப் பொருந - வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லை வேலியையுடைய, கோடை என்னும் மலைக்குத் தலைவனே!

206. எத்திசைச் செலினும் சோறே! பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: பரிசில்.

(அதியமான் பரிசில் நீடித்த காலைப் பாடிய செய்யுள் இது “எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே" என்னும் சொற்கள், ஒளவையாரின் தன்னுறுதியை நன்கு காட்டுவனவாகும்.)