பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμιάσεθεά 217

வாயி லோயே! வாயிலோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! 5

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன்அறியலன்கொல்? என்னறி யலன்கொல்? அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே; அதனால், காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை, 10 மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே: எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே!

வாயிற் காவலனே! வள்ளன்மை உடையவர் செவிகளிலே விளங்கிய சொற்களை விதைத்துப், பரிசிற் பயன் கொண்டு, தாம் நினைத்ததை முடிக்கும் வலிபெற்ற நெஞ்சமும், மேம்பாட்டினைப் பெற வருந்தும் இயல்பும் உடைய பரிசிலர்க்கு, அடையாத வாயிலோனின் காவலனே! அஞ்சி, தன் தரமறியானோ? அன்றி, எம் தரமும் அறியானோ? அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் எனும் வறுமையுற்ற உலகம் அன்று இது. அதனால், இசைக்கருவிகள் கொண்ட எம் காவினைத் தூக்கினேம்; முட்டுக் களைக் கட்டினேம். மரந் துணிக்கும் தச்சனின் தொழில்வல்ல மக்கள் காட்டுக்குச் சென்றால், ஏதாவது ஒரு மரம் கிடையாது போகுமோ? அது போலப் பரந்த இவ்வுலகிலே, எந்தத் திசையிலே சென்றாலும், அந்தத் திசையில் எமக்குச் சோறும் தட்டாது கிடைக்கும் என்று நின் வேந்தனிடம் அறிவிப்பாயாக

சொற்பொருள்: 7.தன் அறியலன் கொல்-தன் தரம் அறியான் கொல்லோ; என் அறியலன் கொல் - என் தரம் அறியான் கோல்லோ 8 மாய்ந்தென - இறந்தாராக.10. சுருக்கினெம் கலப்பை - கட்டினேம் முட்டுக்களை முட்டு - சில்லறைப் பொருள். 11. மரங்கொல் தச்சன் பயந்த மரத்தைத் துணிக்கும் தச்சன் பெற்றெடுத்த 12 மழுவுடைக் கைவல் சிறாஅர் மழுவையுடைய கைத்தொழில் வல்ல மகார்.

207. வருகென வேண்டும்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இன வெளிமான். திணை: பாடாண். துறை: பரிசில்,