பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

229


அறிவும், எண்ண எண்ணப் பெருவியப்பாக விளங்குகின்றன. ஆகவே, தன் ஆட்சி செல்லாத இடத்திலுள்ள சான்றோன் நெஞ்சிலும் இடம்பெற்ற, பெரும்புகழை உடையவனான பெரியோனை இழந்த இச் சோழ தேசம், எவ்வாறு துன்பங்களுக்கு இரையாகுமோ? அதுவே இரக்கத்தைத் தருகின்றது:

சொற்பொருள்: 1. மருட்கை - வியப்பு. 4. தோற்றம் சான்ற விளக்கம் அமைந்த.5. இசைமரபாக புகழ் மேம்பாடாக கந்துஆக - பற்றுக்கோடாக 6. காலை - இன்னாக் காலத்து. 8. அது பழுது இன்றி - அவன் சொல்லிய சொல் பழுது இன்றாக, 9. வியப்பு இறந்தன்று - வியப்பு செயலற்றது. 1. தொன்று - பழைய 13. என் ஆவது கொல் - இடும்பையுறுங்கொல்லோ? அளியது தானே - அதுதான் இரங்கத்தக்கது.

218. சான்றோர் சாலார் இயல்புகள்!

பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் பாடம். திணை: பொதுவியல். துறை: கையறு நிலை. குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.

('சான்றோர் சான்றோர் பாலர் ஆப என்று கூறினும், அவர் தம் சாவுக்கு இரங்கியமையே கருத்தாகலின், கையறு நிலை ஆயிற்று) r

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயந்த காமரு மணியும், இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்கும் காலை, ஒருவழித் தோன்றியாங்கு - என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

பொன், பவளம், முத்து, மணி என்பன ஒவ்வொன்றும் வேறுவேறு தொலைவிடங்களிலேயே கிடைப்பன. ஆயினும் ஒன்றாகத் தொடுத்துக் கோவையாக்கும்போது ஓரிடத்திலே அணியாகிச் சிறப்படையும். அதுபோலவே சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால் பில்லாதார் சேர்வர். இதுவே உலகத்து இயல்பு. அதனையே இங்கும் கண்டோம். .

சொற்பொருள்: 1. மன்னிய-நிலைபெற்ற.2. காமரு விரும்பத் தக்க, 3. இடைபட ஒன்றற்கொன்று இடைநிலம்பட 7. சாலார் - அறிவொழுக்கமின்மையான் அமைதியில்லாதார். சாலார் பாலர் - அமைதியில்லாதார் பக்கத்தார்.