பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

புறநானூறு - மூலமும் உரையும்


தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு, பருதி உருவின் பல்படைப் புரிசை, எருவை நுகர்ச்சி, யூப நெடுந்துண், வேத வேள்வித் தொழில்முடித் தது.உம், அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன், 10

இறந்தோன் தானே, அளித்தஇவ் வுலகம் அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப், பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப், பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார், பூவாட் கோவலர் பூவுடன் உதிரக் - 15

கொய்துகட்டு அழித்த வேங்கையின், மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே!

பகைவர் அரண்களை அழித்தவன்; பாண் சுற்றத்திற்குப் பசிதீர உணவும் குடங்குடமாக மதுவும் உண்பித்து அருளாள னானவன்; மறைவிதிப்படி வேள்விகள் நடத்துவித்தவன்; அவன்தான் இறந்தான். வெம்மைமிக்க கோடைக்காலத்தில் கோவலர்கள் கொடுவாளால் தம் ஆநிரைகளுக்கு ஊட்டப் பூவும் தழையும் சேர உதிர்த்துவிட்ட வேங்கை மரத்தைப் போல, அவன் உரிமை மகளிர் அணி இழந்து நிற்கின்றனர். இனி, இவ்வுலகம் என்னதான் ஆகுமோ? இரங்கத்தக்கதே அதன் நிலை!

சொற்பொருள்: 1. அருப்பம் - அரிய அரண்கள். 2. தசும்பு - மதுக்குடங்கள். உடன் தொலைச்சி சேர நுகர்ந்து. 3. கடும்பு - சுற்றம். 4. அறக்கண்ட தெளிய உணர்ந்த தூஇயல் கொள்கை - தூய இயல்பை உடையதாகிய கற்பொழுக்கமாகிய கொள்கையை யுடைய 7 பருதி - வட்டம் பல்படைப் புரிசை - பலபடையாகச் செய்யப்பட்ட மதிலால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள். 8. எருவை நுகர்ச்சி யூப நெடுந்துண் - பருந்து விழுங்குவதற்காகச் செய்யப்பட்டவிடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து. மன்ற - நிச்சயமாக 15. பூவாள் - கூர்மை பொருந்திய கொடுவாள்.

225. வலம்புரி ஒலித்தது! பாடியவர்: ஆலத்துர்கிழார். பாடப்பட்டோன் :சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல் துறை: கையறுநிலை.

('சோழன் நலங்கிள்ளி கேட்குவன் கொல்?’ என, இரங்கிக் கூறிய செய்யுள் இது)

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய, இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,