பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

245


(பாரியின் பிரிவைக் கபிலரால் பொறுக்கமுடியவில்லை; வடக்கிருந்து உயிர்துறக்க முற்பட்டார். 'உயர்ந்த பாலே நின்னோடு உடனுறைவு ஆக்குக' என்று வேண்டி வடக்கிருந்த தன்மையைப் போற்றல் வேண்டும்) -

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும் மலைகெழு நாட! மா வண் பாரி கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் புலந்தனை யாகுவை - புரந்த யாண்டே 5

பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது ஒருங்குவரல் விடாஅது 'ஒழிக’ எனக் கூறி, இனையை ஆதலின், நினக்கு மற்றுயான் - மேயினேன் அன்மையானே; ஆயினும், 10 இம்மை போலக் காட்டி, உம்மை

இடையில் காட்சி நின்னோடு உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!

பெரிய பலாப்பழத்தைக் குரங்கு கிழித்து உண்ண, அது கிழிந்த முழவுபோலக் காட்சி தரும். அதன் பெருமையால் அதுவும் குறவர்க்குச் சில நாளைக்கு இட்டுவைத்து உண்ணும் உணவாகும். அத்தகைய வளமிக்க மலைநாட்டின் வேந்தனே! மிகுந்த வண்மையுடைய பாரியே! எனக்கு உதவி என்னோடு பழகிய ஆண்டுகளிலெல்லாம், கலந்த நட்பிற்கு ஒவ்வாதவன் நீ யென்றே என்னை வெறுத்தவனாக ஆகிவிட்டாய். பெருமைதங்கிய சிறந்த நட்பிற்கு ஒவ்வாமல், நீ இறந்த போது, நின்னுடன் என்னையும் வரவிடாது, இங்கே தவிர்க’ எனச் சொல்லியும் சென்றாய். நினக்கு யான் பொருந்திய நட்பினன் இல்லையோ? இருப்பினும், இங்கிருந்தது போலவே அங்கும் இடைவிடாது நின்னுடன் இருந்து நின்னைக் கண்டு வாழும் நிலையை, இனியேனும், எனக்குத் தருவாயாக.

- 237. சோற்றுப் பானையிலே தீ!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இளவெளிமான். திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது)

"நீடுவாழ்க! என்று யான் நெடுங்கடை குறுகிப், பாடி நின்ற பசிநாட் கண்ணே,