பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

புறநானூறு - மூலமும் உரையும்


இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே! 15

ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே! 2O

ஐயகோ அஞ்சியின் அரிய மார்பகத்தினிடத்தே தைத்த வேல் பாணரின் உண்கலங்களைத் துளையிட்டு, இரப்பவர்கள் கைகளை ஊடுருவி, அவர் சுற்றத்தினர் கண்ணொளியினை மழுங்கச் செய்து, நுணுகிய அறிவாற் சிறந்தோர் நாவினிற் சென்று தைத்ததே! சிறிய அளவு மதுவே பெற்றால் அதனை எமக்கே அளித்து விடுவான்; பெரிய அளவு கிடைத்தாலோ யாம் பாட எமக்கு அளித்து அவனும் உண்பான். சிறுசோறு எனினும் பலரோடு உண்பான்; பெருஞ்சேறு எனினோ மிகப் பலரோடு உண்பான். எலும்பும் தசையும் உடைய வேட்டைப்பொருள் எல்லாம் எமக்களித்து, அம்பும் வேலும் நுழையும் போர்க்களம் எல்லாம் தானே மேற்கொள்வான். நரந்தம் நாறும் தன் கையால், புலால் நாறும் எம் தலையிலே அன்போடு தடவி மகிழ்வான். அவனோ பட்டனன் எமக்குத் தந்தையாக விளங்கிக் காத்தவன் எங்கே உள்ளான்? இனிப் பாடுவார்க்கு ஒன்று தருவாரும் இல்லையே! நீர்த்துறையின் கண் உள்ள பகன்றைப் பெரும்பூ எவர்க்கும் பயன்படாது கழிவதுபோல, வறிதே மாய்ந்து போகும் உயிர்களே இனி பலவாகும்!

சொற்பொருள்: 10. துளை உரீஇ துளையை உருவி. 11. கையுளும் போகி - கையுள்ளும் தைத்து உருவி. 12. பாவை சோர பாவை ஒளி மழுங்க. 13 நுண்தேர்ச்சி - நுண்ணிய ஆராய்ச்சியை யுடைய.16 ஆசு ஆகு-எமக்குப் பற்றாகிய,18. பகன்றை நறை கொள் மாமலர் - பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர். 19. வைகியாங்கு கழிந்தாற்போல, 20. பல மிகப் பல.

236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல், துறை: கையறு நிலை. குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது.