பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeSlgië Gasolascin - 243

நோகோ யானே? தேய்கமா காலை! பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித், தன்அமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குஉண்டனன்கொல் - உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇயோனே?

பிடியானையின் காலடிபோன்ற சிறிய இடத்தினளவாக மெழுகி, அவன் காதலி, இனிய சிறு பிண்டத்தைப் புல் பரப்பி அதன்மேல் வைத்துள்ளனளே! உலகோர் யாவரும் வந்து புகுமாறு, திறந்த வாயிலுடன் பலரோடும் கலந்து உண்பதையே பண்பாகக் கொண்டவன் அவன். எவ்வாறு இதனை அவன் உண்பானோ? இதற்கு யான் ஏன் நோகின்றேன்? என் மிகுதி வாழ்நாளும் இன்னே அழிவதாக! (எவ்வியின் சோறளித்த பெருமையும், இறந்தார்க்குப் பிண்டமிடுதல் என்னும் மரபும் காண்க)

சொற்பொருள்: 1. மாகாலை- வாழக் கடவ மிக்கநாள். தேய்க - மாய்வதாக, 2. பிடியடி அன்ன - பெண் யானையின் அடிச்சுவட்டை ஒத்த,

235. அருநிறத்து இயங்கிய வேல்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

('இனிப் பாடுநரும் இல்லை! பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை என்று வாடி வருந்துகின்றார் புலவர். வஞ்சித்துணைத் துறைகளுள், ‘இன்னனென்று இரங்கிய மன்னை' என்பதற்கு இளம்பூரணர் காட்டுவர் (தொல், புறத். சூ. 19))

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!

பெரிய கட்பெறினே, -

யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

சிறுசோற் றானும் நனிபல கலத்தன், மன்னே!

பெருஞ்சோற் றாலும் நனிபல கலத்தன் மன்னே 5

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே! அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும்மன்னே! நரந்தம் நாறும் தன்கையால், புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே! -. அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ 1 O