பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

257


குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர் கண்ணித் தடுத்த தண்ணறும் பந்தர்க், கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி, அல்லி உணவின் மனைவியொடு, இனியே 5 புல்என் றனையால் - வளங்கெழு திருநகர் வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. செல்வம் நிரம்பியிருந்த அழகிய நகரே! தீம்பால் வேண்டியழும் பருவத்தாராகிய புதல்வர், தம் தந்தை தனித்துச் சென்றுவிட்ட புறங்காட்டிற்கு வான்சோறு கொண்டு அடைந்தனர். இரவலரை அடிசிலால் தடுத்து நிறுத்திய வாயிலை யும், இரவலரின் கண்ணிரைத் தடுத்து அருளிய பந்தரையும் உடைய மனையே! மயிரைக் கொய்து, வளையல்களைக் களைந்து, அல்லியரிசி உணவு உண்ணும் அவன் மனையாளைப் போல, நீயும் அவனில்லாதே பொலி வழிந்து விட்டனையே! -

சொற்பொருள்: 4 கூந்தல் கொய்து-தலைமயிரைக் குறைத்து. 5. அல்லி உணவின் அல்லியரிசியாகிய உணவையுடைய புல் என்றனை - பொலிவிழந்தாய்.

251. அவனும் இவனும்! பாடியவர்: மாற்பித்தியார். திணை: வாகை. துறை: தாபத ᎧaᎥfᎢ©ᏈᎠᏜᏂ. -

('மள்ளருள் ஒருவனாகத் திகழ்ந்தான் பின்னர்த் துறவு பூண்டு விளங்கிய சிறப்பை வியந்து கூறுகின்றது செய்யுள். இவர் அவனைக் காதலித்தவர் போலும்!)

ஒவத் தன்ன இடனுடை வரைப்பிற், பாவை அன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் - கழைக்கண் நெடுவரை அருவியாடிக், கான யானை தந்த விறகின் 5

கடுந்தெறல் செந்தீ வேட்டுப், புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே?

ஒவியம் போன்ற அழகிய வீட்டிலே, பாவைபோன்ற குறுந்தொடியணிந்த கன்னியரின் அணிகலன்கள் கழன்று