பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Leólusië, Gsässir - 259

ஒய்வமோ? என அவள் புலம்பலில், நம் உள்ளமும் கலங்குகின்றதனை ஒர்க) -

என்திறத்து அவலம் கொள்ளல் இனியே; வல்வார்கண்ணி இளையர் திளைப்ப, 'நகாஅல் என வந்த மாறே, எழாநெல் பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின், வளைஇல், வறுங்கை ஓச்சிக், 5 கிளையுள் ஓய்வலோ? கூறுநின் உரையே! - நின்னுடன் சேர்ந்த வலிய வாராற் கட்டப்பட்ட கண்ணியணிந்த பிற இளைஞர் எல்லாம், போரிலே கலந்து செயல் புரிகின்றனர். ஆயின் நீயோ, “யானும் இவரோடு கூடி மகிழேன்' என்று, அவரை வெறுத்து ஏகினாற்போலப் போரிடையிலே வீழ்ந்து இறந்துபட்டாய். என்பால் இனி வருத்தங் கொள்ளல் வேண்டா. இளமூங்கிலிலே பொதி கழன்றாற்போல நின் பிரிவால் என் கைவளைகள் கழன்றன. வளையற்ற அக் கைகளை உயர்த்திக் காட்டித் துடித்து, நம் சுற்றத்தாரிடம் சென்று, யான் யாது சொல்வேனோ? நின் கருத்தினைச் சொல்வாயாக! ...てい

சொற்பொருள்: 2. வல்வார் கண்ணி - வலிய வாராற் சுற்றப்பட்ட கண்ணியை உடைய. இளையோர் திளைப்ப நின்னுடன் கூடிப் போந்த இளையோர் போரிடா நிற்ப,

254. ஆனாது புகழும் அன்னை!

பாடியவர்: கயமனார். திணை: பொதுவியல் துறை: முதுபாலை. -

(இதுவும் முற்செய்யுளைப் போன்றதே 'அன்னை யாங்கு ஆகுவள் கொல்?’ என எழும் வருத்தமிகுதி கல்மனத்தையும் கரைப்பதாகும்)

இளையரும் முதியரும் வேறுபுலம் படர, எடுப்ப எழாஅய், மார்பமண் புல்ல, இடைச்சுரத்து இறுத்த, மள்ள விளர்த்த வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,

'இன்னன் ஆயினன், இளையோன் என்று, 5 நின்னுரை செல்லும் ஆயின், மற்று முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப், புள்ளார் யாணர்த் தற்றே; என் மகன் வளனும் செம்மலும் எமக்கு என, நாளும் ஆனாது புகழும் அன்னை 10 யாங்குஆ குவள்கொல்? அளியள் தானே!