பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

புறநானூறு - மூலமும் உரையும்



போர் முடிந்து இளையோரும் முதியோரும் வேற்றுநிலம் போய்விட்டனர். நீயும் அவரோடு போகவில்லையோ? நின்னைத் தேடி வந்த யான், எடுக்கவும் எழாது, மார்பு தாயகத்து மண்ணைத் தழுவியவாறே கிடக்கக் களத்திலே கிடக்கின்றாயே?வளையலற்ற என் வெறுங்கையைக் காட்டி, என் காதலன் இவ்வாறானான் என்றேனாயின், ஆல் பழுத்தால் வரும் பறவையினம்போலத் திரண்டு, நின்னைக் காணவருவரே நம் சுற்றத்தினர். அதுதான் போக ‘என் மகனைக் காண்க. வளமும் தலைமையும் இனி எமக்கே’ என்று நாடோறும் நின்னைப் புகழ்ந்து போற்றிய நின் தாய். இனி என்னாகுவளோ? ஐயகோ! அவள் நிலைதான் பெரிதும் இரக்கமுடையதே!

சொற்பொருள்: 3. இறுத்த - மேம்பட வீழ்ந்த மள்ள இளையோய். 6. நின்னுரை - நின் இறந்துபாடு பற்றிய வார்த்தை. 7. முன்னூர் ஊர் முன்னர். 8. புள் ஆர் - புள்ளுக்கள் மிகும். யாணர்த் தற்று - புது வருவாயையுடைய அத்தன்மைத்து. 9. செம்மலும் - தலைமையும். 12. அளியள் தான் - அவள் இரங்கத்தக்கவள்தான்.

255. முன்கை பற்றி நடத்தி! பாடியவர்: வன்பரணர். திணை: பொதுவியல், துறை: முதுபாலை.

(‘கூற்றும் என்போற் பெருவிதுப்புறுக’ என்று கூறிப் புலம்புகின்றாள் தலைவி. மிகச் சோகமான நிலை இது)

ஐயோ! எனின்யான் புலிஅஞ் சுவலே; அணைத்தனன் கொளினே, அகன்மார்பு எடுக்கல்லேன்; என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை இன்னாது உற்ற அறனில் கூற்றே! 5 நிரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம் - நடத்திசின் சிறிதே!

"ஐயோ என்று கதறினால், புலி வந்து நின் உடலையும் கொண்டு போய்விடுமோ என அஞ்சுவேனே அணைத்துத் தூக்கி எடுத்துச் செல்ல முயன்றால், நின் அகன்ற மார்பினை எடுக்கும் வலியும் எனக்கில்லையே! நின்னை இவ்வாறு செய்ததே கூற்றம்! அதுவும் என்னைப்போலவே பெருந்துயர் அடைக! அன்பே! வளைநிறைந்த என் முன்கையைப் பற்றி எழுந்து நடந்து வருக; அதோ! அந்த மலைநிழலை நோக்கியாவது யாம் செல்லலாம்.