பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

261


சொற்பொருள்: 6 வரைநிழல் சேர்கம் - யாம் மலையினது நிழற்கண்ணே அடைவோமாக சிறிது நடத்திசின் மெல்ல மெல்ல நடப்பாயாக. -

256. அகலிதாக வனைமோ!

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: பொதுவியல். துறை: முதுபாலை.

('சுரத்துவழி அவனோடு வந்த எமக்கும் சேர்த்து ஈமத் தாழியை அகலிதாக வனைமோ என்று கலஞ்செய் கோவைக் கேட்கிறாள் தலைவி)

கலம்செய் கோவே கலம்செய் கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போலத் தன்னொடு சுரம்பல வந்த எமக்கும் அருளி, வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி 5

அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

வண்டிச் சக்கரத்திலே பொருந்திய பல்லியானது அதனோடும் சுழன்று நெடுந்தொலைவு செல்வதுபோல வாழ்வின் பல இடர்ப்பாடுகளிலும் அவனோடு ஒட்டி இதுவரை வாழ்ந்து வந்தவள் யான். ஐயகோ! அவனும் இப்போது இறந்தான். வேட்கோவே! அவனுக்குச் செய்யும் ஈமத்தாழியைக் கொஞ்சம் அகலமாக வனைக! எனக்கும் அதனுள் இருக்க இடம் வேண்டுமன்றோ? (இதே கருத்துப்படவரும் 278-ஆம் பாடலையும் காண்க)

சொற்பொருள்: தன்னொடு சுரம்பல வந்த எமக்கும் நெருநெல் நாளால் பலசுரமும் தன்னோடு கழிந்து வந்த எமக்கும் இடமாகும்படியாக

257. செருப்பிடைச் சிறு பரல்!

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: வெட்சி. துறை: உண்டாட்டு.

(மறவர், வெற்றி மேம்பாட்டினால் கள்ளுண்டு ஆடிக் களித்தல் இத்துறையாகும். வெட்சியுள், நோயின் துய்த்தல்” என்பதற்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர். (தொல் புறத்கு 3)