பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

275


"ஒம்புமின், ஓம்புமின், இவண்' என, ஒம்பாது

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,

கன்றுஅமர் கறவை மான; - . z

முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.

வளைந்த கண்ணியும், கடலலை போன்ற மெல்லிய ஆடையும், மன்னன் விரும்புவது சொல்லி அவனைத் தன் வசப் படுத்தலும் ஆகிய இவையெல்லாம், அவனுக்கு ஏற்புடையன வன்று. ஆயின், பகைவரால் வளைக்கப்பட்டுச் சூழ்ந்து கொள்ளப்பட்ட முன்னணிப் போரிலே நிற்கும் தன் தோழனைக் காக்க, அவன் செல்வதைக் காணுங்கள் பகைவர் படையணியைப் பின்னிருந்து ஊடறுத்து, அவர் அஞ்சியலறிச் சிதைந்து ஓடுமாறு தன் வேலால் அவரை அழித்துக் கொண்டே செல்லுகின்றனன். “இங்கேயே இவனைத் தடுத்து நிறுத்துக! நிறுத்துக' எனப் பலர் கூறித் தடுக்க முயன்றனர். அதனையுங் கடந்து, சங்கிலி தொடர்ந்து கால்களைத் தளைக்கவும் தளராது முன்செல்லும் யானைபோன்று, குடர்கள் அவன் குதிரையின் கால்களைத் தளையிடவும் பொருட்படுத்தாது, கன்றை நோக்கி விரைந்து செல்லும் கறவைப்பசுவினைப் போலப், போர்க்களத்தின்கண் விரைந்து புகுந்து தோழனைக் காக்கச் செல்லும் அவன் தறுகண்மைதான் என்னே!

276. குடப்பால் சில்லுறை

பாடியவர்: மதுரைப் பூதன் இளநாகனார். திணை: தும்பை. துறை: தானைநிலை.

('குடப்பால் சில்லுறைபோலப் படைக்கு நோய்எல்லாம் தான் ஆயினனே!’ என, பகைப் படையினை இவன் சிதைத்த செவ்வியைப் பாடுகின்றார் புலவர். இத்தானைநிலைத் துறைக்கே இளம்பூரணனாரும் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ. 14)

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல், இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன், மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த குடப்பால் சில்லுறை போலப், 5 படைக்குநோய் எல்லாம் தான்ஆயினனே.

மணப்பொருள்களை மறந்த, நரைத்து வெளிறிய தலை மயிரும், இரவமரத்தின் வித்தினைப் போல வற்றி உலர்ந்த கண்ணுடைய தனங்களும் உடையவள், செம்மையான பண்புடன் முதுமையும் சேர்ந்து நிரம்பிய மறக்குலத் தாய். அவளுடைய காதல்