பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

புறநானூறு - மூலமும் உரையும்


(இப் பாட்டு மறக்குடி மகள் ஒருத்தியை நோக்கி, ஒருவர் கூறியதெனக் கொள்க. தும்பைத்திணைத் துறைகளுள், 'தானை நிலை’க்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ.74) அவள் கணவன் தனித்து நின்றே பகைவரை நடுக்கமுறச் செய்யும் பேராற்றல் மிக்கவன் என்பது விளங்கும். "யாவரும் அரவுமிழ் மணியின் குறுகார்’ என்றது, இவனது சிறப்பையும், பிறர் இவன்பாற் கொண்டிருந்த பேரச்சத்தையும் காட்டுவதாம்)

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக், கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக், குமரிப்படை தழிஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து, இறையும் பெயரும் தோற்றி, "நுமருள் 5

நாண்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு" எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும் அரவுஉமிழ் மணியின் குறுகார்; நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே!

வானத்திலே வெண்குடை கவித்தாற் போலத் தோன்றிய மதியமானது நிலாவொளி வீசிக் கொண்டிருந்தது. பாசறையிலே கடல்போற் படை மறவர்கள் ஒருங்கே கூடியிருந்தனர்.புதுமையாக வடித்துவந்த வேல் முதலியவற்றுடன் சிலர் களம் புகுந்தனர். அவ் வேளை, நின் கணவன், நிரைதார் மார்பினனாக, நுங்கள் வேந்தன் பெயரையும் புகழையும் தோற்றுவித்துப், பகைவருடன் பெரும்போர் செய்தான். மேலும், 'நும்மில் வாழ்நாள் முறை தீர்ந்தவர் யாவரோ அவரெல்லாம் இங்கே விரைந்து வம்மின்’ என்று கூவி, எதிர்ப் படையினரை அழைத்தும் நின்றான். நாகரத்தினத்தைத் துணிந்து நெருங்குவதற்கு யாவரும் அஞ்சுவது போலவே, அவனையும் நெருங்க அஞ்சி, மலைத்து நின்றனர் பகை மறவர்! *

295. ஊறிச் சுரந்தது! பாடியவர்: ஒளவையார். திணை: தும்பை. துறை: உவகைக் கலுழ்ச்சி.

(களத்திலே வீழ்ந்து பட்டான் தன் மகன் என்று கேட்டதாய், களத்திற் கிடந்த அவன் உடலைக் கண்டு, உவகையும் சோகமும் ஒருங்கே கொண்டு நின்றதைக் கூறுகின்றது செய்யுள். இதுவும் தகடூர்ப் பெரும்போரிடை ஒரு சம்பவத்தைக் குறித்தது ஆகலாம்)

கடல்கிளர்ந் தன்ன கட்டுர் நாப்பண், வெந்துவாய் மடித்து, வேல்தலைப் பெயரித்,