பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

புறநானூறு - மூலமும் உரையும்


(1. படாவும். 2. கல்லென்றனவே, 3. வேந்து உடன்று ஏவான் கொல்லென - வேறு பாடங்கள்)

வேம்பின் கிளைகளை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், நெய் உடைய கையராக மனையோர் வெண்சிறு கடுகினைப் புகைப்பவுமாக, எல்லா வீடுகளிலும் கல்லென்ற ஆரவாரம் கேட்கிறது. அவன் தேர்மட்டும் நெடுநேரமாகியும் வரவில்லையே? ஒருவேளை இந் நெடுந்தகை பகைவரை முற்றவும் அழித்து விட்டேதான் திரும்புவான் போலும்!

297. தண்ணடை பெறுதல்!

பாடியவர்: பாடப்பட்டோன்: பெயர்கள் தெரிந்தில. திணை: வெட்சி. துறை: இண்டாட்டு.

(வீரன் ஒருவன் மதுவை உண்டு மனஞ் செருக்கிய செய்தியைக் கூறும் செய்யுள் இது. சீறுார்க் கோள் வேண்டேம்; தண்ணடை பெறுதலும் உரித்தே' என்னும் சொற்கள், அம் மறவனது மாண்பைக் காட்டுவன)

பெருநீர் மேவல், தண்ணடை எருமை இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக், கன்றுடை மரையாத் துஞ்சும் சீறுர்க் கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி 5 நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித், துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடைபெறுதலும் உரித்தே, வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின், மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே! 10

"எருமையின் இரு கரிய கொம்புகளைப் போன்ற பயற்றங்

கோதுகளை அணையாகப் பரப்பி, அதன்மீது கன்றினையுடைய

மரை ஆன் துஞ்சும் சிற்றுரினை வென்று பெறுதலை யாம்

விரும்பேம். பன்னாடையால் வடிகட்டிப் பூக்களிட்டு முதிர்ந்த

சாடிக் கள்ளினை வாழ்த்தித் துறையருகே புதல்களைச் சேர்ந்து கம்புட்கோழிகள் முட்டையிடும், நீர்வளமிக்க மருத நிலத்து

ஊர்களை வென்று பெறுவதே எமக்கு உரியது." (மார்பிலே

நெடுவேல் பாய்ந்தும் அசையாது பனைமரம்போல நிற்கும்

மறவனுடைய நிலையைக் காணுங்கள்!