பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

301


வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை சாந்தார் அகலம் உளம்கழிந் தன்றே: உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெரு விறல் ஒச்சினன் துரந்த காலை, மற்றவன்

புன்தலை மடப்பிடி நாணக் 10 குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.

பாணனே இச்சிறந்த ஊர் மன்னனின் கைவேல், பகையரசன் ஏறிவந்த யானையின் முகத்திலே உள்ளது. அப் பெருவேந்தன் சினந்து எறிந்த வேலோ, எம் இறைவனின் மார்பகத்தை-என்னைத் தழுவிய சாந்தணிந்த பரந்த மார்பகத்தை - ஊடுருவிச் சென்றது. மார்பில் தைத்த வேலை உள்ளக் களிப்புடன் பிடுங்கிக் கைக்கொண்டு உயர்த்துக் கொண்டே அவன் போரிட்டபோது, அப் பகை வேந்தனும் பட்டுவீழ, அவன் யானைகள் எல்லாம் அவற்றின் மடப்பிடிகள் கண்டுநாணுமாறுபுறங்காட்டி ஓடினவே! எம் தலைவனின் ஆண்மையை அதோ பாராய்!

309. என்னைகண் அதுவே!

பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் திணை: தும்பை. துறை: நூழிலாட்டு.

(பகைவர் படையின் ஊக்கம் கெடும்படி செய்ததற்கு வல்லான். ஒரு மாவீரனைப் பற்றிச் செய்யுள் உரைக்கின்றது.அவன் முகத்தே தோன்றும் ஓர் ஒளி பகைவரை நடுங்கச் செய்வதாயிருந்தது என்கிறார். உள்ளத்தே தறுகண்மை உடையாரது முகத்தே இத்தகைய ஒளியுண்டாதல் இயல்பு)

இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல்லர்ா உறையும் புற்றம் போலவும், கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்றருந் துப்பின் மாற்றோர், "பாசறை 5

உளன் என வெரூஉம், ஓர்ஒளி வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.

படைக் கருவிகளின் முனைமழுங்கப் பகைவரைத் தாக்கிக் கொன்று குவித்துப் போரிட்டுப் போரிலே வெல்லுதல் ஏனையோர்க்கும் எளிதேயாம். ஆனால், நல்ல பாம்பு வாழும் புற்றைப் போலவும், கொல்லேறு திரிகின்ற மன்றம் போலவும், வலியுடைய மாற்றாரும் இவன் பாசறையின்கண் உள்ளான் என எண்ணிவெருவிநடுங்குகின்றனரே! அத்தகைய புகழானது, வெற்றி வேலினை உயர்த்து விளங்கும் எம் தலைவன் ஒருவனிடமே தான் உள்ளதாகும்!