பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

புறநானூறு - மூலமும் உரையும்


310. உரவோர் மகனே!

பாடியவர்: பொன் முடியார். திணை: தும்பை. துறை: நூழிலாட்டு.

(குழந்தைப் பருவத்தில் சிறுகோற்கு அஞ்சியோடியவன், இளமைப் பருவத்தில், களத்திலே மறப்போர் ஆற்றிப் புண்பட்டு வீழ்ந்து புகழ்பெற்ற நிலையை வியந்து போற்றுகின்றது செய்யுள். பகைவர் படை படும்படி தன் மார்பிற் தைத்திருந்த வேலைப் பறித்து எறியும் மறவனைப் புகழ்வது இத் துறை என்பர்) பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், செறாஅது ஒச்சிய சிறகோல் அஞ்சி, உயவொடு வருந்தும் மன்னே! இனியே புகர்நிறங் கொண்ட களிறிட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே! 5 உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு மான்உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.

முன்னே பெரும் போரிட்ட ஆண்மையினனாகக் களத்திலே வீழ்ந்துபட்ட வலியுடையோனாகிய எம் காதற் கொழுநனின் மகனன்றோ இவன்! குழந்தைப் பருவத்திலே பாலுண்ணாது முரணச், சினந்தவளைப்போலச் சிறுகோலை எடுப்பினும் அஞ்சி உடனே உண்ணும் இயல்பினன்தான். ஆனால், இன்றோ களிறுகளைக் கொன்றும் அமையாது, அப் போரிலே மார்பகத்து அம்புபட்டுக் கேடகத்தின்மேல் வீழ்ந்து கிடந்தவனை எடுத்து, 'ஐயோ! மார்பில் அம்பு தைத்துளதே? என வருந்தினேன். அவனோ, அதை யான் அறியேனே! என்றான். உரவோர் மகன் அன்றோ அவன்!

311. சால்பு உடையோனே!

பாடியவர்: ஒளவையார். திணை: தும்பை. துறை: பாண்பாட்டு.

(பாணர், பெரும் போராற்றி மடிந்தானாகிய வீரன். ஒருவனுக்குச் சாப்பண்ணைப் பாடித் தம் கடன்கழித்தலாகிய பொருளில் விளங்குவது இச் செய்யுள்.தலைவனின் மறமேம்பாடும் காட்டப் பெறுகின்றது. ‘அண்ணற்கு ஒருவருமில்லை என்று வருந்தும் நிலையையும் உணர்க.)

களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,

புலைத்தி கழிஇய துவெள் அறுவை;