பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

புறநானூறு - மூலமும் உரையும்


323. உள்ளியது சுரக்கும் ஈகை'

பாடியவர், பாடப்பட்டோன் பெயர்கள் தெரிந்தில. திணை: வாகை துறை: வல்லாண் முல்லை.

("கறையடி யானைக்கு அல்லது உறை கழிப்பறியா வேலோன்” என, ஒருவனது வல்லாண்மையைப் போற்றுகின்றது செய்யுள்)

புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும் δΠ...................................... க்கு உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் 5 கறையடி யானைக்கு அல்லது உறைகழிப் பறியா, வேலோன் ஊரே.

புலியிடத்திலே அகப்பட்டு இறந்தது ஒரு மான்பிணை. அதன் கன்றுக்குக் காட்டிலுள்ள ஒரு முதிய கறவைப்புசு இரக்கங்கொண்டு, பாலூட்டி வளர்த்தது. அதேபோலப் பரிசிலர்க்கு அவர் வறுமையால் வந்து வேண்டியவையெல்லாம் அருளுடன் தந்து அவர்களைப் பேணுபவன் அவன். தள்ளாத ஈகையும் உடையவன். எனினும், போரின்கண் களிற்று யானைகளைக் கொல்வதற்கல்லாது வேல் எடுக்காத வீரம் உடையவனும் ஆவான்.

324. உலந்துழி உலக்கும்!

பாடியவர்: ஆலத்துர் கிழார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை. - -

('வலம்படு தானை வேந்தர்க்கு, உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணை எனத் தலைவனுடைய மற மேம்பாட்டையும், "பாணரொடிருந்த நாணுடை நெடுந்தகை என அவனது கொடை மேம்பாட்டையும் கூறுகின்றது செய்யுள். வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல், புறத். சூ. 5)

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப் புள்ளுன் தின்ற புலவுநாறு கயவாய், வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை உடையின் சுரையுடை வால்முள் ஊக நுண்கோற் செறித்த அம்பின், 5