பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

புறநானூறு - மூலமும் உரையும்


இவ்வாறு வேட்டு வருபவரோடெல்லாம் மறுத்துப் போர் செய்தால், இவளை அணைந்து வாழவரும் மணவாளர்தாம் யாவரோ? தெளிவாகக் கூறுக!

338. ஓரெயின் மன்னன் மகள்!

பாடியவர்: குன்றுார் கிழார் மகனார். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினத்தைப் பற்றிய குறிப்பு.

. (ஒரெயின் மன்னனது ஒரு மடமகளை மணம் பேசிவந்த பலரும், இசைவு பெறாது வறிதே திரும்பியது கண்டு பாடிய செய்யுள் இது. மூவேந்தர் வரினும், 'வணங்கார்க்கு ஈகுவேன் அல்லன்” எனக் கூறியிருந்த தந்தையது தகைமையையும் உரைக்கின்றனர்)

- ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,

நெல்மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின், படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க்காவின், நெடுவேள் ஆதன் போந்தை அன்ன, பெருஞ்சீர் அருங்கொண் டியளே, கருஞ்சினை 5 வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், கொற்ற வேந்தர் வரினும் தன்தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் - வண்தோட்டுப் பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று 10 உணங்குகலன் ஆழியின் தோன்றும் ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே! முற்றிய கதிர்கள் தம்முள்ளே பின்னிக்கிட்க்கும் விளை வயல்களின் நடுவே, கம்பீரமாகக் கடல் நடுவே விளங்கும் கப்பல்போல விளங்கும் ஒரே அரணுக்கு உரியவனான அம் மன்னனின் ஒரே மகள் பெருஞ் செல்வத்திற்கு உரியவள்.ஏர் பரந்த வயலும், நீர் நிறைந்த தெருக்களும், நெல் மலிந்த மனையும், அழகு நிறைந்த தெருக்களும், வண்டு ஒலிக்கும் பூங்காக்களும் உடைய ஊரினள். நெடுவேள் ஆதனின் போந்தை நகரைப் போன்ற பெருஞ்சீரும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருள்களும் உடையவள். அவளை வேட்டு வருவோர் வேம்பும் ஆத்தியும் போந்தையும் சூடிய மூவேந்தரே யாயினும் அவர் மலைந்த சென்னியும், அணிந்த வில்லும் உடைய கொற்றவேந்தரே எனினும், தன் தகுதிக்கு ஏற்ப வணங்கிக் கேட்டாலன்றி, அவள் தந்தை அவளை அவர்க்கும் தருவானல்லன். (தந்தையின்