பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

335


வலுவுள்ள பெருமரங்களாயினும், பகை வேந்தர் பாடியிட்டுத் தம் கொல்யானைகளைக் கட்டுதலால் வேர் கிளம்பினவே! என்னாகுமோ இனி?

348. பெருந்துறை மரனே! பாடியவர்: பரணர். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி

(ஒரு கன்னியின் பெற்றோர், வந்து கேட்ட ஒர் அரசிளைஞனுக்கு அவளைத் தர மறுத்தனர். அதன் காரணமாக அவன் அவ்வூரை முற்றுகை இட்டனன். களத்தில் வென்று இவளை மணப்பேன்’ என்று சூளும் உரைத்தனன். கன்னியின் பெற்றோரும் போருக்குத் தயாராயினர். இருதிறத்துப் படையணிகளும் கோட்டைக்கு உள்ளும் புறமுமாகப் பரவின. அதனைக் கண்ட புலவர் பாடிய செய்யுள் இது. 'இவள் தாய் இவளைப் பெறாதிருந்தால் நன்றாயிருக்குமே!’ என்கின்ற அவருடைய சோகத்தின் மிகுதி இதனாற் புலனாகும்)

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக். கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக், கள்ளரிக்கும் குயம், சிறுசின்

மீன் சீவும் பாண் சேரி,

வாய்மொழித் தழும்பன் ஊணுர் அன்ன, 5

குவளை உண்கண் இவளைத், தாயே ஈனா ளாயினள் ஆயின், ஆனாது நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும், செந்நுதல் யானை பிணிப்ப, - வருந்தல மன்எம் பெருந்துறை மரனே. 10

நெல்லறுக்கும் உழவர் தண்ணென்ற ஒலியொடு தண்ணுமையை ஒலிக்க, அதுகேட்டு மூங்கிற்கணுவிலே தேனடை கொண்டிருந்த ஈக்கள் அஞ்சிப் பறந்து ஓடின. அதனால், அஞ்சாது தேனை வடித்து உண்ணும் குயவர் சேரி ஒருபால்; சிறுசிறு மீன்களைப் பிடித்து உண்டு வாழும் பாண்சேரி ஒருபால்; இவ்வாறு வளம் மிகுந்து விளங்குவது வாய்மொழி தவறாத தழும்பனின் ஊணுார். அவ்வூர்க் குளத்தில் மலர்ந்த குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணினளான இவளை, இவள் தாய் பெற்றிருக்காமலேயே இருந்திருக்கக் கூடாதோ? மரநிழல்தோறும் நெடுந்தேர்கள் நிற்கின்றன. நீர்த்துறைக் கரைப் பெருமரங்களில் யானைகளைக் கட்ட அம் மரங்கள் வேர் கிளம்பி வருந்துகின்றன. இவ்வாறு, பகைவர் புகுந்து பாழ்படுத்தும் நிலை இவளாலன்றோ இவ்வூர்க்கு ஏற்பட்டது!