பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

புறநானூறு - மூலமும் உரையும்


கலங்கிய கள்ளினைக் கனிந்த தாளிதத் தோடுங்கூடிய கொழுந்துவையோடு பிறர்க்கு அளிப்பவரும், பணிவும் பணிந்த சொல்லும் உடையவரும் ஆகிப், பலர்க்குப் பயன் விளைக்கும் செயல்களைச் செய்து, இவ்வுலகத்திற்கோர் புகலிடமாக இருந்து அரசாண்டோர் மிகச் சிலரே யாவர். பெருமானே! நீயும் இனிக் கேட்பாயாக அதனை அடைய வழி அறியாதவர்தாம் பலராவர். அத்தகையோர் செல்வமும் நிலைத்து நில்லாது. இன்றும் செல்வத்தின் பண்பு அதுவே. அதனால், நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாது வாழ்வாயாக பரிசிலர் விரும்பி வந்தால், அவர் குறையற நிறைவு செய்தலைப் பாதுகாப்பாயாக! இடுகாட்டில் பலர் வெந்து சாம்பலாவதையும், அவர்க்குப் புன்மேற் சிறுபிண்டம் வைக்கப்படுவதையும் கண்டபின்னும், பலர் பகுத்துண்டு வாழும் செவ்வியையும், அதனால் வரும் புகழையும் வாய்த்தவரா யில்லையே!

பெரிதுண்டலால் நோயும், கழிசினத்தால் தீமையும் உண்டாதலால், “பெரிதாராச் சிறு சினத்தார்” என்றார். பகைவரும் விரும்பும் மொழியும் சொல்லுமுடையர் என்பார் "தழுஉ மொழியர்” என்றார். தகை என்றதைப் பெருந்தகை என விளியாக்கினும் அமையும்.

361. முள் எயிற்று மகளிர்!

(பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில. அறஞ் செய்து வாழ்ந்து மறைந்தானாகிய ஒரு தலைவனின் சால்பினை வியந்து போற்றிக் கூறுகின்றது செய்யுள். நிலை யாமையை உணர்த்தி, அதனால் அறநெறி நிற்றலை வற்புறுத்துவதும் இது)

கார்எதிர் உருமின் உறறிக் கல்லென, ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! நின்வரவு அஞ்சலன் மாதோ, நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத் 5 தாயின் நன்று பலர்க்கு ஈத்துத், தெருணடை மாகளிறொடு தன் அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றுதன் தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், ... 10

புரி மாலையர் பாடி னிக்குப் - பொலந் தாமரைப் பூம் பாணரொடு