24
புறநானூறு - மூலமும் உரையும்
நீருடையதாகலின், அதனுள் மக்கள், விலங்குகள் இறங்கிப் படிந்து மாசுபடாவண்ண காதல் மரபாகலின், இவ்வாறு கூறுவர். 7. எல்லுப்பட-விளக்கமுண்டாக.12.உரு-அச்சம்.18. நாமம் - அச்சம்.
17. யானையும் வேந்தனும்!
பாடியவர்: குறுங்கோழியூர் கிழார். பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. திணை: வாகை. துறை: அரசவாகை, இயன்மொழியும் ஆம்
('தென்குமரி.காவல' என இவனது குடியியல்பு கூறலால், இயன்மொழி ஆயிற்று. ‘இவனது வெற்றி மேம்பாடு கூறலால் அரசவாகையும் ஆயிற்று. இவன், "நீடு குழி அகப்பட்ட கொல் களிறு, குழிகொன்று கிளை புகலத் தலைக்கூடியமை போலப், பாண்டியன்பாற் சிறைப்பட்டிருந்து தப்பிச் சென்றவன் என்பதும் இதனால் அறியப்படும்)
தென் குமரி, வட பெருங்கல் குண குட கடலா வெல்லை, குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழி மொழியக் கொடிது கடிந்து, கோல் திருத்திப் - 5 படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழிகாவல! குலை இறைஞ்சிய கோள் தாழை - அகல் வயல், மலை வேலி! - 10
நிலவு மணல் வியன் கானல், தெண்கழிமிசைச் சுடர்ப்பூவின், தண் தொண்டியோர் அடு பொருந: மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட , 15
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின், 20 பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்