பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

349


('மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமைக்கு இளம்பூரணரும் (தொல். புறத். சூ. 19), வீடேதுவாக வன்றி வீடு பற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறிய தற்கு நச்சினார்க்கினியரும் (தொல், புறத். சூ. 24) எடுத்துக் காட்டுவர். 'வாயுறை வாழ்த்து' என்பதற்கு நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர் என்னும் மூவருமே எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ. 107; 112)

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித் தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக - காடுபதி யாகப் போகித், தத்தம் 5

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந்தனரே, அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை! மடங்கல் உண்மை மாயமோ அன்றே; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு, 10 வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பிலாஅ அவிப்புழுக்கல்

கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, நிலங்கல னாக, இலங்குபலி மிசையும் / 15

இன்னா வைகல் வாரா முன்னே,

செய்ந்நீ முன்னிய வினையே,

முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

இந்தப் பரந்த மாநிலத்தை, இடையிலே உடையிலை அளவு இடமும் பிறர்க்கு இன்றித் தாம் ஒருவராகவே ஆண்டு வந்த காவல் மன்னர்கள் கடற்கரை மணலினும் பலராவர். அவரெல்லாம், முடிவில் தம் நாடு பிறர்க்கு உரிமையாக, இடுகாடே பதியாகச் சென்று மாய்ந்தனர். அதனால், நீயும் கேள்: அழியாது என்றும் உடலோடு நிலைத்திருக்கும் உயிரென ஒன்றுமே கிடையாது. இது தெளிந்த உண்மை. மாயம் எதுவும் இதில் இல்லை. இடுகாட்டிலே நீயும் சென்று சேரும் முன்னே, நின்நாடு ஆளும் இச்சையை மறந்து, புகழ்பெற்று உய்வதற்கு ஆவனவற்றை இன்றே செய்யத் தொடங்குவாயாக!

364. மகிழ்கம் வம்மோ!

பாடியவர்: கூகைக் கோழியார். திணை: பொதுவியல். துறை # பெருங்காஞ்சி.