பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

355


ஆள்.அழிப் படுத்த வாளேர் உழவ! கடாஅ யானைக் கால்வழி யன்னவென் தெடாரித் தெண்கண் தெளிர்ப்பவொற்றிப் 15

பாடி வந்த தெல்லாம், கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்தநின் அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே. களிறுகளை வேண்டிப் பெறலாம் என்றாலோ, குன்றுகள் போல அவையெல்லாம் அம்புபட்டு இறந்து கிடக்கின்றன. தேர்கள் வேண்டலாம் என்றாலோ, குதிரைகள் இறக்கச் சிதைந்து மண்ணிலே கிடக்கின்றன. குதிரைகள் பெறலாம் எனிலோ, அவை வாளால் வெட்டப்பட்டுவீழ்ந்து கிடக்கின்றன.இவ்வாறு, பரிசிலர் பெறத்தக்கன எதுவும் இன்றி அனைத்தையும் அழித்து நிற்கும் வாளேர் உழவனே தடாரிப் பறையை அறைந்து, யான் நின்னைப் பாடி வந்ததெல்லாம், நின் மார்பிலே அணிந்துள்ள அரவைப் போன்ற ஆரத்தைப் பரிசில் பெறும் பொருட்டாகத் தானோ?

369. போர்க்களமும் ஏர்க்களமும்!

பாடியவர்:பரணர். பாடப்பட்டோன் சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன். திணை: வாகை. துறை: மறக் களவழி.

(போர்க் களத்தை ஏர்க் களத்தோடு ஒப்புமைப்படுத்திப் பாடுகின்றார் புலவர். அரசனை உழவனாகக் கூறுகின்றனர். குட்டுவனது வள்ளன்மையும் சிறப்பும் செய்யுளால் நன்றாக விளங்கும். இவனே சேரன் செங்குட்டுவனாதல் வேண்டும் என்பதும் அறிதல் வேண்டும்)

இருப்புமுகம் செறிந்த ஏந்தெழில் மருப்பின், கருங்கை யானை கொண்மூ வாக, நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த . வாள்மின் னாக, வயங்குகடிப்பு அமைந்த

குருதிப் பலிய முரசுமுழக்காக, - 5

அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின், வெவ்விசைப் புரவி வீசுவளி யாக, விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை, ஈரச் செறுவயின் தேர்ஏ ராக, + 10

விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்

செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால், பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,